சிங்க‌ப்பூர்

tm logo
Saturday, January 28th, 2012
வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மறுவிற்பனை விலை, 2011ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட, நான்காவது காலாண்டில் 1.7 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த ஆண்டில், ஒட்டுமொத்த அளவில் இந்த உயர்வு 10.2 விழுக்காடு . நான்காம் காலாண்டில் மட்டும் 5,921 வீவக வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. இருப்பினும், 2010ஆம் ஆண்டில் விற்கப்பட்டதை விட சென்ற ஆண்டில் 24,633 வீவக வீடுகள், அதாவது 24 விழுக்காடு குறைவாக மறுவிற்பனை செய்யப்பட்டன.
இந்த ஆண்டு சுமார் 25,000 தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் கட்டித் தரப்படும் என வீவக தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும், பிடோக், புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், புக்கிட் தீமா, கிளமெண்டி, கேலாங், தோ பாயோ ஆகிய பகுதிகளில் 4,110 வீடுகள் விற்பனைக்கு வ


முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

pasirrisbeach
Saturday, January 28th, 2012

தேசிய சுற்றுப்புற வாரியத்தால், நீரின் தரம் மேம்படுத்தப்பட்ட தால், பாசிர் ரிஸ் கடற்கரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் திறந்துவிடப்பட்டது. அந்தக் கடற்பகுதியில் உள்ள நீரின் தரம், ‘சுமார்’ நிலையில் இருந்து ‘நல்ல’ நிலைக்கு உயர்த்தப்பட்டது.

‘நல்ல’ மற்றும் ‘மிக நல்ல’ நிலைகளைப் பெற்ற கடற்கரைப் பகுதிகள் மட்டுமே, நீச்சல், வேக்போர்டிங் போன்ற உடலை நனைக்கும் நீர் விளையாட்டுகளுக்கு உகந்தவை என உலக சுகாதார நிறுவனம் வழிமுறை களை நிர்ணயித்துள்ளது.

பழைய மதகுகளில் இருந்து கசியும் நீர், அருகாமையில் உள்ள கப்பல்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியாகும் நீர் ஆகியவற்றால், முன்னர் ‘சுமார்’ தரத்தை பாசிர் ரிஸ் கடற்கரை பெற்றிருந்தது.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

abdul muthalif
Saturday, January 28th, 2012
யூனோஸ் கிரசென்ட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் சமையல் அறையில்  54  வயது  பெண்மணி கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் தொடர்பாக, அவரது மகன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உதவி அழைப்பின் பேரில் போலிஸ் அங்கு சென்றபோது, குளமாகத் தேங்கி நின்ற ரத்தத் தின் நடுவே அந்த மாது அசைவற்றுக் கிடந்தார்.
வியாழக்கிழமை பிற்பகல் 2.28 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக போலிஸ் தெரி வித்தது. சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த துணை மருத்துவப் படையினர், 10 நிமிடங்களுக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.
திருமதி ஹஸ்னா என்று அழைக்கப்படும் அப்பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

tm logo
Saturday, January 28th, 2012
சமூகமும் மக்கள் தொகையும் நிலையாக இருக்காது. ஆகையால் சிங்கப்பூரர்களும் அதன் தலைவர்களும் இணைந்து பணியாற்றி, சிங்கப்பூரை ஆட்சி புரிய புதிய வழிகளைக் கண்டறி வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொரு ளியல் மாநாட்டுக்குச் சென்றிருக்
கும் திரு லீ, அங்கு நடந்த ஒரு பேட்டியில் இவ்வாறு கருத் துரைத்தார்.
சிங்கப்பூர் சமூகத்தில் ஏற்பட்டு உள்ள பற்பல மாற்றங்கள் மக்கள் தொகையின் சில பிரிவினரிடையே அதிருப்தியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தின. அவை கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் தெளிவாக வெளிப்பட்டன என்றும் திரு லீ கூறினார்.
சிங்கப்பூரில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழுமா என்று கேட்கப்பட்டதற்கு, “அரசியல் நிலைமை மாறக்கூடும். அதற்கு ஏற்றவாறு முன்னோக்கிச் செல்ல புதிய வழிகளை சிங்கப்பூர் கண்டறிவேண்டும் என்று பதிலளித் தார்.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்
tm logo
Saturday, January 28th, 2012
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இன்னும் 54,000 வேலைகள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று மனிதவள அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
நேற்றுக் காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், பொருளியல் சற்று மந்தமாக இருப்பதால், முதலாளிகள் வேலைக்கு ஆட்கள் சேர்ப்பதைச் சற்று தளர்த்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உணவு பரிமாறுபவர்கள், பாதுகாவலர்கள, கடை விற்பனை ஊழியர்கள் போன்ற சேவை மற்றும் விற்பனைத் துறையிலேயே அதிக வேலைகள் காலியாக உள்ளன.
நிபுணர்கள், நிர்வாகிகள், மேலதிகாரிகள், தொழில் நுட்பர்கள் போன்றோரை உள்ளடக்கிய பிரிவில் பல வேலைகள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, ஆசிரியர் வேலைக்கு 2,030 இடங்கள், நிர்வாகி அதிகாரிகள் வேலைக்கு 1,520 இடங்கள் இருக்கின்றன.  

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்
tm logo
Saturday, January 28th, 2012
தம் மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி பேச வந்த கணவரின் பேச்சைக் கேட்க மனைவி விரும்பவில்லை. அவரைக் கேட்க வைப்பதற்காக கணவர் மனைவியைக் கட்டிப் போட்டார். தங்கள் பெற்றோர் உரக்கக் கத்தி பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர்களின் மூத்த மகள் போலிசை அழைத்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தமக்கு எதிராக மனைவி பெற்றிருந்த சுய பாதுகாப்பு ஆணையை மதிக்காமல் அவருக்குத் தொந்தரவு கொடுத்ததற்காக கணவர் திரு முகம்மது ஹனிஃப் அப்துல்லாவுக்கு நேற்று கீழ்நீதிமன்றம் $2,000 அபராதம் விதித்தது.
மனைவியைக் கட்டிப்போட்டு அவருக்குப் பயத்தை ஏற்படுத்தியதை 46 வயது கணவர் ஒப்புக்கொண்டார்.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்
tm logo
Saturday, January 28th, 2012

தனது பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை வழங்கும் பொருட்டு, எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று தனது சொந்த ஐஃபோன் செயலியை அறிமுகப்படுத்தியது.

‘எஸ்ஆம்ஆர்டி கனக்ட்’ எனும் பெயர் கொண்ட அந்தச் செயலியை  ஐஃபோன் கைத்தோலைபேசி மூலமாக ‘ஏப்பல் எப் ஸ்டோரிலிருந்து’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ரோயிட் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த சேவை இந்த ஆண்டு பிற்பகுதியில் கிடைக்கும் என்று  எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.

இந்தச் செயலி மூலம் எஸ்எம்ஆர்டி பேருந்து மற்றும் எஸ்எம்ஆர்டி ரயில்கள் பற்றிய தகவல்களைப் பயணிகள் தெரிந்துகொள்ளலாம் அல்லது எஸ்எம்ஆர்டி டாக்சிகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
‘எஸ்ஆம்ஆர்டி கனக்ட்’ செயலியைக் கொண்டு விளம்பர அறிவிப்புகளில் உள்ள ‘பார்கோட்டை’ பதிந்து பொருட்களை வாங்கக் தொடங்கலாம் என்றும் விளக்கப்பட்டது.


முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

 திரு ஜார்ஜ் இயோ.
Saturday, January 28th, 2012

- இளவரசி மகேந்திரன் -

சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ விருதுக்கு  தேர்வு பெற்றுள்ளார்.
விருது குறித்த தகவல் கிடைத்தபோது  திரு இயோ உலக பொருளியல் மாநாட்டில் பங்கேற் பதற்காக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இருந்தார்.

விருது கிடைத்திருப்பது பற்றி தெரிவித்த அவர் மிகவும் கௌர வமாக உள்ளது என்று கூறினார்.
இதன் மூலம் இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெறும் முதல் சிங்கப்பூரர் என்ற பெருமையைப் பெறுகிறார் 57 வயது திரு இயோ. மேலும்  இந்த ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள 27 பேரில் திரு இயோவைத் தவிர மற்ற அனைவருமே இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளைப் பெறுவோரின் பட்டியலை இந்திய அரசு அண்மையில் வெளியிட்டது.

‘பொது உறவு’ பிரிவிற்கான பத்ம பூஷண் விருது சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் திரு ஜார்ஜ் இயோவிற்கு வழங்கப்படுகிறது.

அதேபோல் ‘வர்த்தகம் மற்றும் தொழிற்துறை’ பிரிவிற்கான ‘பத்ம {’ விருது சிங்கப்பூரின் பொதுத் தூதரும், பிரபல வர்த்தகரும், தெற்காசிய ஆய்வுக் கழகத்தின் இயக்குநருமான திரு கோபிநாத் பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

tm logo
Saturday, January 28th, 2012

சாங்கி விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகள் 90 பேருக்கும் இரட்டிப்பு அதிர்ச்சி.

அந்த ஐஎக்ஸ்-681 ரக விமானம் விமானக் கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதி இன்றி கிளம்பியது. இதைக் கவனித்த கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் விமானத்தை உடனே நிறுத்தும்படி விமானிகளுக்குக் கூறினர்.

மேலே பறப்பதற்கு தயாரான நிலையில், மணிக்கு 260 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடு தளத்தில் ஓடிய விமானத்தை சட்டென்று நிறுத்தினர் விமானிகள்.
இன்னும் ஒரு விநாடி தாமதித்து விமானத்தை நிறுத்த முயன்றிருந்தால்கூட ஆபத்தாக முடிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் ஜனவரி 23ஆம் தேதி திங்கட்கிழமை சாங்கி விமான நிலையத்தில் நிகழ்ந்தது.
முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

jaya-rajini-27-01-2012
Saturday, January 28th, 2012

நடிகர் ரஜினிகாந்த் (இடம்) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ‘தானே’ புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய ‘தானே’ புயலால் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. 48 பேர் உயிர் இழந்தனர். பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஏராள பயிர்கள் சேதமடைந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “முதல்வர் ëஜயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். எனது உடல் நலம் தேற வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறினேன். விரைவில் புதிய படம் மூலம் எனது ரசிகர்களைச் சந்திப்பேன்,” என்று தெரிவித்தார்.
எனினும் இச்சந்திப்பு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான அடிக்கல் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.  படம்: சதீஷ்

Syndicate content