‘பத்மா’ புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியீட்டு விழா

இந்திய கலாசாரத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு அவர்களின் குழந்தை பெற்றெடுக்கும் தகுதியைப் பொறுத்தே அமையும் சூழல் இன்றும் நிலவுகிறது.

சிக்கலான கர்ப்பங்களையும் கருச்சிதைவுகளையும் மையமாகக் கொண்ட கதைகளை அரிதாகவே நாம் காண முடிகிறது. இதனால் அத்தகைய சூழலில் அவதியுறும் பெண்களைப் பற்றி அதிகமாக பேசுவதோ பகிரப்படுவதோ இல்லை.

இதுபோன்ற சமூக அவலங்களை உடைக்கும் எண்ணத்தோடு ‘பத்மா’ என்ற புத்தகத்தை திருமதி மாலா மகேஷ் எழுதியுள்ளார்.

இக்கதையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கேரளாவில் அழகும் அறிவும் நிரம்பிய 16 வயது பத்மா வாழ்ந்து வருகிறார். இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டில் மும்பையில் விளம்பர நிர்வாகியாகப் பணிபுரிகிறார் நைனா எனும் கதாபாத்திரம்.

இவ்விருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழும் வெவ்வேறு பெண்கள். ஆனால் அவர்களுடைய பிரச்சினை ஒன்றுதான். அது, திருமணமாகியும் மகப்பேறு இல்லாதது.

குழந்தையின்மையால் அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சினைகளை அலசுகிறது இந்த ‘பத்மா’ புத்தகம்.

2022ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், தற்போது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, தமிழ்மொழி மாதத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தில் சிறப்பாக வெளியிடப்பட்டது.

சிறு வயதில் தன் பாட்டி கூறிய பல கதைகளிலிருந்து ‘பத்மா’ கதைக்குக் கரு கிடைத்ததால், இந்தத் தமிழ்ப் பதிப்பை, தமிழ்ப் புத்தகங்களை விரும்பி வாசித்து வந்த தன் பாட்டிக்குச் சமர்ப்பணம் செய்வதாக திருமதி மாலா கூறினார்.

சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகக் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், வரலாற்றில் முதன்முறையாக சிங்கப்பூரின் ஒட்டுமொத்தக் கருத்தரிப்பு விகிதம் சென்ற ஆண்டு 1.0க்குக் கீழ் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள் இந்தியாவில் வாழ்பவர்களாக இருந்தாலும் ‘பத்மாவின்’ மையக்‌ கருத்துகள் சிங்கப்பூரர்களிடம் போய் சேரும் என்று தான் நம்புவதாக கருதினார் திருமதி மாலா.

மேலும், “இந்தக் கதை கருவுறாமை பற்றியது மட்டுமல்ல, பெண்களுக்கான ஆற்றலளித்தலையும் பற்றியது,” என்று அவர் கூறினார்.

‘பத்மா’ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் கலந்துக்‌கொண்டார்.

“இந்தக் கதையை ஓர் ஆணின் கண்ணோட்டத்தில் இருந்து படித்ததால் நிறைய புதிய கருத்துகளை அறிந்து கொண்டேன். பல சமயங்களில் பெண்களின் அடையாளங்களை அளவிடும் குறியீடுகளாக பலர் கருதுவது அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இதற்கு உதாரணமாக ஒரு பெண் கருவுறுதலைக் கூறலாம்,” என்றார் அவர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முக்கிய விருந்தினர்களான இந்து தமிழ் திசை இயக்குநரும் அக்ரோகார்ப் இன்டர்நேஷனல் இயக்குநருமான திருமதி அகிலா ஐயங்கார், தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிப் பிரிவு தலைவர் திரு அழகிய பாண்டியன், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளரான திரு. ஆர். ராஜாராம், திரு விக்ரம் நாயர் ஆகியோருக்‌கு ‘பத்மா’ புத்தகம் வழங்கப்பட்டது.

ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடி குழந்தை பிறக்காததற்கான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பத்மாவையும் நைனாவையும் சித்தரிக்‌கும் ‘பத்மா’ புத்தகம் https://malamahesh.com/ என்ற இணையத்தளத்தில் விற்பனைக்‌கு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!