சிறப்புத் தேவையுடையோருக்கான ஐரோப்பிய பொதுவிருது நீச்சலில் எஸ்2 100 மீட்டர் மல்லாந்த நீச்சல் பிரிவில் சிங்கப்பூரின் யிப் பின் சியூ தங்கம் வென்றுள்ளார்.
போர்ச்சுகலின் மடெய்ரா பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 23) நடைபெற்ற போட்டியில் யிப் வாகை சூடினார். அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு நிமிடங்கள் 17.20 விநாடிகள்.
சனிக்கிழமையன்று (ஏப்ரல் 26) நடைபெறவுள்ள எஸ்2 50 மீட்டர் மல்லாந்த நீச்சலிலும் யிப் பங்கேற்பார். மே மாதம் 17லிருந்து 19ஆம் தேதிவரை சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சிறப்புத் தேவையுடையோருக்கான உலக நீச்சல் தொடரிலும் அவர் போட்டியிடுவார்.
ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாதம் எட்டாம் தேதிவரை நடக்கவிருக்கும் சிறப்புத் தேவையுடையோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறார் யிப்.