பிரைட்டனை வென்று புள்ளி பட்டியலில் நெருங்கி வருகிறது மான்செஸ்டர் சிட்டி

லண்டன்: ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் பிரைட்டன் அண்ட் ஹோவ் அல்பியன் குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் நசுக்கிய மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் குவாடியோலா, லீக் விருதை வெல்ல மூன்று குழுக்களுக்கிடையே கடுமையான போட்டி கடைசி வரை நிலவும் என்று நம்புகிறார்.

சிட்டியின் ஃபில் ஃபோடன் போட்ட இரண்டு கோல்கள், தொடர்ந்து நான்காவது முறையாக லீக் விருதை வெல்லும் அதன் கனவை மேலும் வலுவாக்கியது.

எவர்ட்டன் குழுவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்று, சற்று பின்னடைவைச் சந்தித்த லிவர்பூல் குழுவின் நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டது சிட்டி. இப்போது பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஆர்சனல் 77 புள்ளிகளைப் பெற்றுள்ளது. சிட்டி 76 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. லிவர்பூல் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

“எங்களுக்குத் தேவையான மூன்று புள்ளிகளை எடுத்து விட்டோம். இன்னும் ஐந்து ஆட்டங்கள் உள்ளன. அவை அனைத்திலும் வெற்றி பெற வேண்டும். போட்டி மிகக் கடுமையாக இருக்கும்,” என்று குவாடியோலா ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையத் தளத்திடம் தெரிவித்தார்.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சிட்டியின் கெவின் டி பிராய்ன போட்ட அருமையான கோலால் சிட்டி முன்னணிக்குச் சென்றது. சிட்டியின் அதிக கோல் போட்ட வீரரான எர்லிங் ஹாலண்ட் காயம் காரணமாக விளையாடவில்லை.

சிட்டியின் நான்காவது கோலை ஜூலியன் அல்வரேஸ் போட்டார். புள்ளி பட்டியலில் 11வது இடத்தில் இருக்கும் பிரைட்டன், சிட்டியின் ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!