ராசிபலன்

virgo

கன்னி

இன்றைய பலன்:

அவரச கதியில் செயல்பட்டால் வீண் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க நேரிடும். இன்று சில்லரை விவகாரங்களை நல்லவிதமாகப் பேசி தீர்த்துக்கொள்ளப் பாருங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

வாரப் பலன்:

அன்­புள்ள கன்னி ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரனின் அருள்பெறலாம். புதன், ராகு, சுக்கிரன் நற்பலன்களைத் தருவர். சனி, குரு, கேது, சூரியன் வலுவிழப்பர். செவ்வாயின் இடப்பெயர்ச்சி சாதகமாக அமையாது.

எதிரிகளைக் கண்டு அஞ்சாமல் போராடக் கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் சவால்மிக்க பொறுப்புகளை எதிர்கொள்வீர்கள். அவற்றை நிறைவேற்ற உங்களில் சிலர் ஓய்வின்றி உழைக்க வேண்டியிருக்கும். தனித்திறமைகள், நல்லவர்களின் ஆதரவு, தெய்வ அருளின் துணையோடு நிச்சயம் சாதிப்பீர்கள் என நம்பலாம். வயிற்றுவலி, உடல் சோர்வு என சிறு கோளாறுகள் தோன்றி மறையக்கூடும். பயணங்கள், புது முயற்சிகளைத் தவிர்த்தல் நல்லது. சொத்துகள் வகையில் எதிர்பாராத ஆதாயங்கள் உண்டு. வழக்கமான தொகைகள் வந்து சேரும். செலவுகளும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். சேமிப்புகள் உயராது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் இருக்காது. பணியாளர்கள் சக ஊழியர்களை அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். வார இறுதியில் நிகழும் திடீர் சந்திப்புகளால் ஆதாயமுண்டாகும். இச்சமயம் சம்பந்தமில்லாத விவகாரங்களில் தலையிடுதல் கூடாது.

குடும்பத்தார் விட்டுக்கொடுத்து நடந்தால் குடும்ப மேன்மை காக்கலாம்.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 3, 4

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7