ராசிபலன்

gemini

மிதுனம்

இன்றைய பலன்:

விறுவிறுப்பான இந்நாளில் உங்களுடைய முயற்சிகள் எதுவும் சோடை போகாது. ஆதாயங்கள், பாராட்டுகள் மன நிறைவு தரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

நிறம்: பச்சை, மஞ்சள்

வாரப் பலன்:

அன்­புள்ள மிதுன ராசிக்­கா­ரர்­களே,

சந்திரன் உலவும் அமைப்பு சிறப்பாக அமையும். இடப்பெயர்ச்சிக்குப் பின் செவ்வாயின் பலம் சிறக்கும். புதன், சூரியன், சுக்கிரன், கேது நலம்புரிவர். குருவால் அதிக நலமில்லை. ராகு, சனி தொல்லை தருவர்.

அனைவருக்கும் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும் என்று நினைக்கும் பண்பாளர்கள் நீங்கள். யாரிடம் என்ன பேசுகிறோம், யாரை எதற்காக அணுகுகிறோம் என்பதில் தெளிவும் புரிதலும் தேவை. இல்லையெனில் வீண் விமர்சனங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாக நேரிடும். அடுத்து வரும் நாள்களில் பொருளியல் நிலை சீராக இருக்காது. எதிர்பார்த்த சில தொகைகள் கைக்கு வராமல் போகும். எனினும் எதிர்பாராத வரவுகளைக் கொண்டு நாள்களைச் சமாளித்திட இயலும். அகலக்கால் வைக்கும் முயற்சிகள், அதிக முதலீடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. வழக்குகள் இழுத்தடிக்கக்கூடும். சொத்துகள் தொடர்பான முயற்சிகளில் தகுந்த திட்டமிடுதல் தேவை. வேலைப்பளு சற்றே அதிகரிக்கலாம். விடாமுயற்சி, கூடுதல் உழைப்பு இருப்பின் சாதிக்கலாம். பணியாளர்களும் வியாபாரிகளும் ஒவ்வோர் அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். வார இறுதியில் உடல்நலம் பாதிக்கப்படக்கூடும்.

குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும். பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை.

அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 1, 3

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6