இன்றைய பலன்:
கூடுமானவரை எந்தப் பணியையும் ஒத்திப்போட வேண்டாம். இன்று தொடங்கிய வேகத்தில் பணிகள் மளமளவென நடந்தேறும்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
நிறம்: அரக்கு, பச்சை
வாரப் பலன்:
அன்புள்ள மேஷ ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரனின் அமைப்புகள் சிறப்பாக அமையும். சந்திரனால் நலமுண்டு. குரு, சனி, கேது, ராகு, சூரியனால் நலமில்லை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாக அமையாது. தன்னம்பிக்கையின் சின்னமாக வலம் வரக்கூடியவர்கள் நீங்கள். இவ்வாரம் பேச்சைக் குறைப்பது நல்லது. சுற்றி இருக்கும் அனைவரையும் நம்பவேண்டாம். அதேபோல் யாரையும் வீணாக சந்தேகிப்பதும் கூடாது. அடுத்து வரும் நாள்களில் 'நம்மால் இதைச் செய்ய முடியுமா' எனும் சந்தேகம் அவ்வப்போது மனதில் எழும். இந்த வீண் அச்சத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு தன்னம்பிக்கையுடன் களமிறங்குங்கள். நண்பர்கள் ஆதரவு பலம்சேர்க்கும். வருமான நிலை சுமார் எனலாம். அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும். வீண் விரயங்கள் குறைந்திருக்கும். சிறு உடல் பிரச்சினைகள் தோன்றி மறையும். பயணங்கள், புது முயற்சிகள், சொத்துகள் வகையில் எதுவும் சாதகமாக அமையாது. பணியாளர்களும் வியாபாரிகளும் அடக்கி வாசிப்பது நல்லது. வார இறுதியில் நம்பிக்கையூட்டும் தகவல்கள் கிட்டும். இச்சமயம் இனிக்கும் சம்பவங்கள் நிகழும் வாய்ப்புண்டு. குடும்பத்தார் சிறு கருத்து வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 2, 4 அதிர்ஷ்ட எண்கள்: 3, 9