இன்றைய பலன்:
நண்பர்கள் துணையோடு சிலவற்றை உருப்படியாகச் செய்து முடிக்க இயலும். இன்று வழக்கத்தைவிட அதிக பணிகளைச் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
நிறம்: சிவப்பு, பச்சை
வாரப் பலன்:
அன்புள்ள மீன ராசிக்காரர்களே,
உங்கள் ராசிக்கு புதன் சிறப்பான இடத்தில் சஞ்சரிக்கிறார். சுக்கிரனால் நலமுண்டு. குரு வகையில் அதிக நலமில்லை. சனி, ராகு, கேது, சூரியன், சந்திரனின் ஆதரவு இல்லை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாக அமையாது.
இலக்குகளைச் சரியாக நிர்ணயித்து அவற்றை எட்டிப் பிடிக்கும் அறிவாளிகள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்களது வாழ்க்கைப் பாதையில் முள்ளும் மலரும் கலந்திருக்கும். உங்களது பொறுப்புகளைக் கச்சிதமாக நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். சிறு தடைகள் அவ்வப்போது குறுக்கிடும். நீங்கள் விலகி நின்றாலும் சிலர் தேடிவந்து தொல்லை கொடுப்பர். எதுகுறித்தும் கவலைப்படாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். உரிய பலன் கிட்டும். கையிருப்பைக் கொண்டு தேவைகளை ஈடுகட்ட வேண்டி இருக்கும். சிக்கனம் காத்தால் சேமிப்புகள் கரையாது. உடல்நலம் சற்றே பாதிக்கப்படும் வாய்ப்புண்டு. அலைச்சல் தரும் புது முயற்சிகள், பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். மங்கலப் பேச்சுகள், சொத்துகள் தொடர்பான முயற்சிகளுக்கும் இந்த அறிவுரை பொருந்தும். பணியாளர்களும், வியாபாரிகளும் நிதானப் போக்கை கடைபிடித்தல் நல்லது. வார இறுதியில் நீண்டநாள் முயற்சிகள், தடைப்பட்ட பணிகள் முன்னேற்றம் காணும்.
குடும்பத்தில் இயல்புநிலை இருக்கும்.
அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 2, 4
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6