இன்றைய பலன்:
வெட்டிப் பேர்வழிகளை அடையாளம் கண்டு ஒதுக்கி வைக்கப் பாருங்கள். பெரியவர்கள் துணை நிற்பர். செலவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
நிறம்: அரக்கு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள விருச்சிக ராசிக்காரர்களே,
நிழல் கிரகமான கேது அருள்புரிவார். புதன், சுக்கிரன், சந்திரனால் நலமுண்டு. குரு, சனி, ராகு, சூரியன் வலுவிழப்பர். செவ்வாயின் இடப்பெயர்ச்சி சாதகமாக அமையாது.
பிறரது விஷயங்களில் தலையிடாத கண்ணியவான்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் கவனம், நிதானம் தேவை. எதிலும் விவேகமாகச் செயல்படுங்கள். கடினமான, புதுப் பொறுப்புகளை ஏற்பதில் அவசரம் கூடாது. உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். நட்பு, உறவு வட்டாரங்களில் பலர் ஒதுங்கி நிற்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆதாயங்களுக்காக ஆசைப்பட்டு அலைச்சல் தரும் பணிகளைச் செய்ய வேண்டாம்.
வருமான நிலை சுமார் எனலாம். வரவுகளுக்கும் செலவுகளுக்கும் சரியாய் இருக்கும். கடன் வாங்கியேனும் குடும்பத்தாரின் ஆடம்பரச் செலவுகளை ஈடுகட்ட வேண்டும் எனும் எண்ணத்தைக் கைவிடுங்கள். சொத்துகள், மங்கல காரியங்கள் தொடர்பில் நிதானம் தேவை. பணியாளர்களும் தொழில் முனைவோரும் உழைப்புக்குரிய பலன்களைப் பெறுவர். வார இறுதியில் நீண்டநாள் முயற்சிகள் கைகூடும். இச்சமயம் எதிரிகளின் போக்கைக் கவனித்துச் செயல்படுங்கள்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோர் ஆதரவுண்டு.
அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 1, 2
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6