இன்றைய பலன்:
முக்கியமற்ற விவகாரங்கள் குறித்து கவலை வேண்டாம். இன்று நல்லவர்கள் துணை நிற்பர். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
நிறம்: நீலம், வெண்மை
வாரப் பலன்:
அன்புள்ள ரிஷப ராசிக்காரர்களே,
இவ்வாரம் இடம்பெயரும் செவ்வாயின் மங்கலத்தன்மை சிறக்கும். புதன், சூரியன், சுக்கிரன், சந்திரன், சனீஸ்வரன் ஏற்றங்களைத் தருவர். குரு, ராகு, கேதுவின் பலம் கெடும்.
எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு சாதிக்கக்கூடியவர்கள் நீங்கள். அடுத்து வரும் நாள்களில் உங்களுக்குரிய வரவுகள் சிறப்பாக இருக்கும். செலவுகள் அதிகம் என்றாலும் சமாளித்திடலாம். பணிச்சுமை அதிகரிக்கும். காரியத் தடைகளும் உண்டு. நீங்கள் உழைப்பில் குறை வைக்காதவர்கள் என்பதால் தடைகளை மீறி சாதிப்பீர்கள் என நம்பலாம். சிறு பயணங்களால் ஆதாயமுண்டு. புது முயற்சிகளில் நெருக்கமானவர்கள் துணைநிற்பர். சொத்துகள் வகையில் ஒருசிலருக்கு ஆதாயமுண்டு. மங்கலப் பேச்சுகள் ஆமை வேகத்தில் நகரும். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம். கவலைப்பட ஏதுமில்லை என்றாலும் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது. நட்பு ரீதியில் உதவிகள் கிட்டும். வியாபாரிகள் லாபம் பெறுவர். பணியாளர்கள் ஒன்றிரண்டு சலுகைகளைப் பெறுவர். வார இறுதியில் பணம் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும். இச்சமயம் நல்ல தகவல்கள் தேடிவரும்.
இல்லறம் இனிக்கும். மனைவி, மக்கள் ஆதரவாக இருப்பர்.
அனுகூலமான நாள்கள்: மார்ச் 30, 31
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5