ராசிபலன்

sagittarius

தனுசு

இன்றைய பலன்:

யாரையும் குறைத்து எடை போட வேண்டாம். இன்று வெளி வேலைகள் எளிதில் நடந்தேறும். மனக் குழப்பம் ஒன்று முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 5

நிறம்: ஊதா, வெண்மை

வாரப் பலன்:

அன்­புள்ள தனுசு ராசிக்­கா­ரர்­களே,

இவ்வாரம் சந்திரன் உலவும் அமைப்பு சிறப்பாக அமையும். குரு, ராகு, புதன், சுக்கிரன் நலம்புரிவர். சனி, கேது சூரியனால் நலமில்லை. இடமாற்றத்துக்குப் பின் செவ்வாயின் பலம் கெடும்.

பிறருக்காக விட்டுக்கொடுக்கும் நல்லுள்ளம் படைத்தவர் எனப் பலரும் உங்களைக் குறிப்பிடுவதுண்டு. இவ்வாரம் உங்களது மனத்தில் தெளிவும் துணிச்சலும் அதிகரித்திருக்கும். உங்களது செயல்திட்டங்கள் கச்சிதமாக அமையும். பொறுப்புகள் அதிகரிக்கும் நேரமிது. அவற்றை நிறைவேற்றிட வழக்கத்தைவிட சற்றே அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அகலக்கால் வைக்கும் முயற்சிகளைத் தவிர்க்கவும். வரவுகள் ஓரளவு மனநிறைவு அளிக்கும். செலவுகள் கட்டுப்பட்டிருப்பது நிம்மதி அளிக்கும். வழக்குகளில் இழுபறி போக்கு நீடிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்து ஒதுங்கி நிற்கப் பாருங்கள். உடல்நலம் பொதுவாக நன்றாக இருக்கும். பணியாளர்களும் தொழில் புரிவோரும் உழைப்புக்குரிய ஏற்றத்தைக் காண்பர். வார இறுதியில் சிறு பிரச்சினை ஏற்படக்கூடும். இச்சமயம் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்துவிடுவது நல்லது.

குடும்பத்தில் சிறு குறையும் இருக்காது. பிள்ளைகள் ஏற்றம் காண்பர்.

அனுகூலமான நாள்கள்: மார்ச் 30, ஏப்ரல் 2

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5