ராசிபலன்

leo

சிம்மம்

இன்றைய பலன்:

கடினம் எனக் கருதிய பணிகளும்கூட எளிதில் நடந்தேறும். இன்று எந்த பணியையும் புறக்கணிக்கக் கூடாது. மாலையில் ஓய்வு உண்டு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

நிறம்: பச்சை, அரக்கு

வாரப் பலன்:

அன்­புள்ள சிம்ம ராசிக்­கா­ரர்­களே,

குரு பகவான் சிறப்பான இடத்தில் அமர்ந்து அருள்புரிவார். சுக்கிரனால் நலமுண்டு. சனி, ராகு, கேது, புதன், சூரியன், சந்திரனால் நலமில்லை. செவ்வாயின் இடமாற்றம் சாதகமாக அமையாது.

அடுத்து வரும் நாள்களில் உங்களது உடல், மன நலன்கள் சிறப்பாக இருக்கும். எப்போதும் தெளிவான மனநிலையில் கச்சிதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுவீர்கள். முக்கியப் பொறுப்புகள், புது வாய்ப்புகள் தேடி வரும். முன்பே திட்டமிட்ட பணிகளைச் செவ்வனே செய்து முடித்திடுவீர்கள். அதற்காக தடைகளே இருக்காது என நினைத்துவிட வேண்டாம். வழக்கமான இடையூறுகள், பிரச்சினைகள் தலைதூக்கும் என்பதே உண்மை. வருமான நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். அடிப்படைத் தேவைகள் அனைத்தும் குறைவின்றி பூர்த்தியாகும். உங்களில் சிலரைத் திடீர் செலவுகள் சற்றே தடுமாற வைக்கக்கூடும். பணியாளர்களுக்கு சவாலான பொறுப்புகள் காத்திருக்கும். சுயதொழில் புரிவோர்க்கு உரிய ஆலோசனைகள் கிடைத்திடும். வார இறுதியில் புது முயற்சிகள், பணம் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்.

குடும்ப நலனுக்கான முயற்சிகள் வெற்றி பெறும். பிள்ளைகள் வகையில் செலவுகள் உண்டு.

அனுகூலமான நாள்கள்: மார்ச் 31, ஏப்ரல் 1

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7