இன்றைய பலன்:
விடாப்பிடியாக இருந்து திட்டமிட்டவற்றைச் சாதிப்பீர்கள். எனவே பாராட்டுகளுக்கும் ஆதாயங்களுக்கும் குறைவிருக்காது. சிறு தடைகளைச் சமாளித்துவிடலாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
நிறம்: பச்சை, மஞ்சள்
வாரப் பலன்:
அன்புள்ள கும்ப ராசிக்காரர்களே,
மாதக் கோள்களான புதன், சுக்கிரனின் அருள்கிட்டும். சந்திரனால் நலமுண்டு. குருபலம் உண்டு. சனி, ராகு, கேது, சூரியன் தொல்லை தருவர். செவ்வாயின் இடமாற்றம் சாதகமாகாது.
எத்தகைய சூழ்நிலையிலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்காதவர்கள் நீங்கள். இவ்வாரம் சில விஷயங்கள் சாதகமற்றுப் போனாலும் சிலவற்றில் வெற்றியை எதிர்பார்க்கலாம். இவ்வாரம் உங்களுக்குரிய வரவுகள் சீராக இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது உங்கள் பொறுப்பு.
பொறுப்புகள் அதிகரிக்கும் நேரமிது. ‘எதையும் சுலபத்தில் முடிக்க இயலவில்லை’ என ஒருசிலர் புலம்ப நேரிடும். முயற்சிகளைக் கைவிடக்கூடாது. இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். புது வாய்ப்புகளை ஏற்க இது உகந்த நேரமல்ல. கூடுமானவரை தனித்துச் செயல்படுங்கள். அதற்காக தேடிவரும் உதவிகளைப் புறக்கணிக்க வேண்டாம். நெடுந்தூரப் பயணங்கள் வேண்டாம். வழக்குகளின் போக்கு திருப்தி அளிக்காது. மங்கலப் பேச்சுகளில் இருந்த தடைகள் விலகுவது நிம்மதியளிக்கும். பணியாளர்களும் வியாபாரிகளும் எதிர்பார்ப்புகளின்றி செயல்படுவது நல்லது. வார இறுதியில் நிம்மதி தரும் தகவல்கள் வந்து சேரும். இச்சமயம் புதிய அறிமுகங்கள் கிட்டும்.
குடும்ப நலன் தொடர்பான முயற்சிகள் வேகம் காணும்.
அனுகூலமான நாள்கள்: ஏப்ரல் 1, 3
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9