தமிழ்நாடு

தஞ்சாவூர்: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் தமிழக அரசு துணைபோவதாக குற்றம்சாட்டி, காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் வியாழக்கிழமை (மே 2) போராட்டம் நடைபெற்றது.
சென்னை: தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவதூறு பரப்பும் வகையில் காணொளி வெளியிட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை: சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் குறுந்தொலைவு ரயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டித்து வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்ற தென்னக ரயில்வே, 24 மணி நேரத்தில் அதாவது மே 2 தேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், குறுந்தொலைவு ரயில் சேவையானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி முதல் தினசரி இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
நெல்லை: சேலம் மாவட்டம் அய்யன் பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 47). இவர் காற்றாலைகளுக்கு மின் உபகரணங்கள் வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் மே மாதம் பிறந்த உடனே பல நகரங்களில் வெப்பநிலை உச்சத்தைத் தொட்டுள்ளது. 37.7 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் பதிவான இடங்களின் எண்ணிக்கை நேற்று 20ஆக உயர்ந்துள்ளது.