இன்றைய பலன்:
தேவை இல்லாமல் யாருடனும் மோதத் தேவையில்லை. இன்று தடைகளை மீறி முக்கியப் பணிகளை முடிப்பீர்கள். ஆதாயங்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
வாரப் பலன்:
அன்புள்ள மகர ராசிக்காரர்களே,
இவ்வாரம் இடம்பெயரும் செவ்வாயின் மங்கலத்தன்மை சிறக்கும். புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன் நலம்புரிவர். சனிபலம் உண்டு. குரு, ராகு, கேதுவின் ஆதரவு இல்லை.
அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்கள் நீங்கள். இவ்வாரம் மனக்குழப்பங்கள், அச்ச உணர்வுகள் முடிவுக்கு வரும். நம்மால் எதிலும் வெற்றி காண முடியும் எனும் எண்ணம் மேலோங்கி நிற்கும். இதற்கேற்ப ஏற்றுக்கொண்ட பொறுப்புகளைக் கச்சிதமாக நிறைவேற்றுவீர்கள். சில தடைகள் குறுக்கிட்டாலும் சலிப்படையாமல் செயல்பட்டு அவற்றைக் கடந்திடுவீர்கள். நட்பு வட்டத்தில் புதிதாகச் சிலர் இணைவர். உறவினர்களில் சிலர் தேடிவந்து தோள் கொடுப்பர். உடல்நலம் நன்றாக இருக்கும். கூடுதல் சுறுசுறுப்பு, வேகத்துடன் செயல்பட இயலும். குடும்பத்தார் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வருமான நிலை ஓரளவு திருப்தி தரும். செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு உரிய தொகைகள் தேடிவரும். பிறருக்காக பிணைக் கையெழுத்திடுவது, திடீர் பயணங்கள் மேற்கொள்வது, அதிக முதலீடு ஆகியவற்றைத் தவிர்க்கவும். பணியாளர்களும் வியாபாரிகளும் திட்டமிட்டும் தவறுகளின்றியும் செயல்பட்டு ஏற்றம் காண்பர். வார இறுதியில் திடீர் ஆதாயங்கள் தேடி வரலாம். இச்சமயம் வீண் விவகாரங்கள் தலைதூக்கலாம் என்பதால் கவனம் தேவை.
இல்லறச் சக்கரம் இனிதே சுழலும். மனைவி, மக்கள் ஆதரவாக இருப்பர்.
அனுகூலமான நாள்கள்: மார்ச் 30, 31
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7