15 மாத காத்திருப்பு இன்றி 940 முதியோர் குடும்பங்கள் வீவக மறுவிற்பனை வீடுகளை வாங்கின

கடந்த 2022 செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனியார் வீடுகளை விற்ற 940 முதியோர் குடும்பங்கள், 15 மாத காலம் காத்திருக்காமல் நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டை வாங்கியுள்ளன.

2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி முதல், தனியார் வீட்டு உரிமையாளர்கள், தங்கள் சொத்தை விற்ற பிறகு வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்க 15 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்கும் 55 வயதும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சொத்துவிலை தணிப்பு நடவடிக்கையின் ஓர் அங்கமாகும்.

அந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற அத்தகைய வீடுகளுக்கான அனைத்து மறுவிற்பனை பரிவர்த்தனைகளிலும், அந்த 940 பரிவர்த்தனைகள் 4 விழுக்காட்டுக்கும் குறைவானது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ பிப்ரவரி 5ஆம் தேதி தெரிவித்தார்.

“சிறிய எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டால், நான்கறை வீவக மறுவிற்பனை வீடுகளின் விலை மற்றும் மறுவிற்பனை அளவில் இந்த முதியோர் பிரிவினால் குறைந்தளவு பாதிப்பே இருக்கக்கூடும்,” என்று அவர் கூறினார்.

முதியோர்களான தனியார் வீட்டு உரிமையாளர்களுக்கான விலக்கு, விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சோங் கீ ஹியோங்கின் கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஐந்தறை மறுவிற்பனை வீட்டு விலையில் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை என்றும் திரு லீ கூறினார்.

இந்த விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, தனியார் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாங்கிய ஆறு மாதங்களுக்குள் தங்கள் தனியார் சொத்தை விற்றால் வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

சொத்துச் சந்தை நிறுவனமான ஆரஞ்சு டீ & டை ஜனவரி 17ஆம் தேதிவெளியிட்ட அறிக்கையின்படி, 2023ன் நான்காம் காலாண்டில் நான்கு அறை மறுவிற்பனை வீட்டு விலை, அனைத்து வீட்டு வகைகளைக் காட்டிலும் மிக விரைவாக 0.7% ஏற்றம் கண்டது.

முதியோருக்கான விலக்கு நான்கறை மறுவிற்பனை வீடுகளுக்கான தேவையை அதிகரித்திருப்பதால், இது விலை உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று சொத்து ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நான்கறை மறுவிற்பனை வீடுகள் மொத்த வீவக மறுவிற்பனை வீட்டுப் பரிவர்த்தனைகளில் மிக அதிகமாக, 44.4 விழுக்காடாக இருந்தது என்று ஆரஞ்சு டீ & டையின் அறிக்கை சுட்டியது.

விலக்குக் கோரி வீவகவிடம் விண்ணப்பித்த 850 தனியார் வீட்டு உரிமையாளர்களுக்கு 15 மாத காத்திருப்பு காலத்தை வீவக தள்ளுபடி செய்தது என்று திரு லீ மற்றொரு பதிலில் கூறினார்.

2022 செப்டம்பர் 30ஆம் தேதிக்கு 2023 டிசம்பர் 31க்கும் இடைப்பட்ட காலத்தில் கிடைக்கப்பெற்ற 3,470 மேல்முறையீட்டு விண்ணப்பங்களில் அந்த எண்ணிக்கை ஏறக்குறைய 25 விழுக்காடு.

விலக்குப் பெற்றவர்கள் எண்ணிக்கை, அதற்கான காரணங்கள் குறித்து பொத்தோங் பாசிர் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சித்தோ யீ பின் கேட்ட கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதிலில் திரு லீ இதனைத் தெரிவித்தார்.

அவ்வாறு விலக்கு பெற்ற தனியார் வீட்டு உரிமையாளர்கள் இரு பிரிவினர். ஒன்று, 2022 செப்டம்பர் 30க்கு முன்னர் தங்கள் தனியார் சொத்தை விற்க அல்லது மறுவிற்பனை வீட்டை வாங்க உறுதியளித்ததற்கான ஆதாரங்களை வழங்கியவர்கள், மற்றவர்கள் நிதி நெருக்கடியில் இருப்பவர்கள் அல்லது “மாற்று வீட்டுத் தேர்வே இல்லாத இக்கட்டான சூழலில் இருப்பவர்கள்.”

காத்திருப்புக் காலம் என்பது, மறுவிற்பனை வீடுகளுக்கான தேவையை மிதப்படுத்துவதற்கும், வீட்டுத் தேவை அதிகமாக உள்ளவருக்கு மறுவிற்பனை வீட்டு விலை கட்டுப்படியானதாக இருப்பதை உறுதி செய்வதற்கும் ஒரு தற்காலிக நடவடிக்கையாகும் என்று திரு லீ மீண்டும் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!