வீவக மறுவிற்பனை வீடுகளின் மதிப்பீட்டுக்குமேல் ரொக்கம் வழங்குவது குறைந்தது

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023), வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளை வாங்கிய வெகுசிலரே, ‘சிஓவி’ எனப்படும் வீட்டின் மதிப்பீட்டுத் தொகைக்குமேல் ரொக்கம் வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.

இவர்களில் 15 விழுக்காட்டினர் சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில் இவ்வாறு அதிக ரொக்கம் வழங்கினர்.

ஒப்புநோக்க, 2022ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் இந்த விகிதம் 30 விழுக்காடாகப் பதிவானதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.

மறுவிற்பனை வீட்டிற்கு கழக மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கும் அந்த வீட்டின் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசம் ‘சிஓவி’ எனப்படுகிறது.

ஜனவரி 15ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் லீ, சென்ற ஆண்டு இடைநிலை ‘சிஓவி’ தொகை நிலையாக ஏறத்தாழ $30,000ஆகப் பதிவானதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில், இந்த ஆண்டு புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மை தொடர்ந்து உலகப் பொருளியலைப் பாதிக்கும் என்றும் சிங்கப்பூர் அதற்கு விதிவிலக்கன்று என்றும் கூறியதை, அமைச்சர் லீ மீண்டும் எடுத்துரைத்தார்.

மேலும், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் தற்போது 3.7 விழுக்காட்டிற்கும் 4.4 விழுக்காட்டிற்கும் இடைப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்விளைவுகளை வீட்டு உரிமையாளர்களும் வீடு வாங்க விரும்புவோரும் அதிகக் கடன் பெற்றுள்ள நிறுவனங்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வீடு வாங்கும்போது விவேகமாகச் செயல்படும்படி அமைச்சர் லீ வலியுறுத்தினார்.

சவால்களுக்கிடையிலும் சென்ற ஆண்டு அதிக எண்ணிக்கையில், அதாவது 43,000 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அவற்றில் 21,400 வீவக வீடுகள். 2018க்குப் பிறகு ஆக அதிக எண்ணிக்கை இது என்று திரு லீ கூறினார்.

கொவிட்-19 கிருமிப் பரவலால் கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய வீடுகளின் கட்டுமானம் தடைபட்டது. அதேவேளையில் வீட்டுக்கான தேவை வலுவாக இருந்தது.

‘பிடிஓ’ வீடுகளின் கட்டுமானம் நிறைவடையத் தாமதமானதால் பலர் மறுவிற்பனை வீடுகளை நாடத் தொடங்கினர். அரசாங்கம், சென்ற ஆண்டு பல்வேறு நடைமுறைகளை அறிமுகம் செய்தது.

கூடுதல் முத்திரைத்தாள் வரி, புதிய பிடிஓ, தனியார் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவற்றால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வைக் கையாள முடிந்ததாக திரு லீ கூறினார்.

தற்போது வீடுகளுக்கான தேவை இரு பிரிவுகளிலும் நிலைபெறத் தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!