You are here

இந்தியா

கூலிப்படைகள் ஆதிக்கம்: எதிர்க்கட்சிகள் புகார் - இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன்

 இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன்

சென்னை: கொலை செய்வ தையே தொழிலாகக் கொண்டு செயல்படும் கூலிப்படைகளின் அட்டகாசம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் சென்னை மாநகரம் கொலை நகரமாக மாறி விட்டதோ என மக்கள் அஞ்சும் வகையில் தினந்தோறும் படு பயங்கரமான கொலைகள் நடந்து வருவதாகக் கூறி உள்ளார்.

அமைச்சர் வளர்மதியிடம் குடிநீர் கேட்டு மக்கள் போராட்டிய திருவரங்க மக்கள்

அமைச்சர் வளர்மதி

திருச்சி: தங்களுக்கு அமைச்சர் தெரிவிக்கும் நன்றி தேவையில்லை, நல்ல குடிநீரே தேவை என திருவரங்கம் தொகுதி மக்கள் அமைச்சர் வளர்மதியிடம் தெரிவித்தனர். மேலும், உப்புத் தண்ணீர் நிறைந்த புட்டியைக் கொடுத்து அதை குடிக்குமாறு அமைச்சரிடம் பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் திருவரங்கத் தொகுதியில் களமிறங்கிய வளர்மதி, கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைய டுத்து அமைச்சர் பதவியும் கிடைத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தொகுதி மக்களுக்கு அவர் நேரில் நன்றி தெரிவித்தார். அப்போது கரை யாம்பட்டி கிராமத்துக்குச் சென்ற அவரை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டனர்.

திருவள்ளூர் ஏரிகளில் உடைப்பு: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

திருவள்ளூர்: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், ஏரி உடைப்பைச் சரிசெய்ய வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக திருவள்ளூரின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பொது இடத்தில் மனைவியை அடித்து உதைத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

சவிதா

பெங்க­ளூரு: பொது இடத்தில் பலர் பார்க்க, மனை­வியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒரு­வர் அடித்­து உதைத்தது பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது. கர்­நா­ட­கா மாநிலத்தில் சித்­த­ராமையா தலைமை­யி­லான காங்­கி­ரஸ் ஆட்சி நடக்­கிறது. இந்த மாநி­லத்­தில் உள்ள பார­திய ஜனதா கட்­சியைச் சேர்ந்த குமா­ர­சாமி, முடி­கிரே தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த­வர். இவ­ரது மனைவி சவிதா, மாநில அர­சில் உத­விப் பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வரு­கிறார்.

ராமரை விமர்சித்ததாக கைதான கல்லூரிப் பேராசிரியர் மகேஷ் பணியிடை நீக்கம்

பேராசிரியர் மகேஷ் சந்திர குரு

ராமாயணத்தில் வரும் ராமரை விமர்சித்ததாகப் பேராசிரியர் ஒருவர் மீது வழக்குத் தொடுக்கப் பட்டு கைது செய்யப்பட்டார். அது தொடர்பாக அவர் பணிபுரிந்து வந்த மைசூரு பல்கலைக் கழகம் அவரை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப் படுகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை பேராசிரியராக மகேஷ் சந்திர குரு (படம்) பணியாற்றி வருகிறார்.

ஆம்ஆத்மி எம்எல்ஏ கைது; டெல்லியில் நெருக்கடி நிலை!

சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் மொக­னியா

இந்­தி­யத் தலை­ந­கர் டெல்­லியை ஆளும் ஆம் ஆத்மி கட்­சி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் மொக­னியா செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் உரை­யாற்­றிக் கொண்­டி­ருந்த­போது திடீ­ரென அங்கு வந்த போலி­சார் அவரைக் கைது செய்­வ­தாகக் கூறி இழுத்­துச் சென்ற­னர் (படம்). இதனால் டெல்­லி­யின் முதல்­வர் கெஜ்­ரி­வால் டெல்லியில் மோடி நெருக்­கடி நிலையை அறி­வித்திருப்ப­தாக தனது டுவிட்­ட­ரில் தெரி­வித்­துள்­ளார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் துவக்கம்

புனே: நாடு முழு­வ­தும் ‘100 ஸ்மார்ட் சிட்டி’களை (பொலி­வுறு நக­ரங்கள்) உரு­வாக்­கப்­படும் என்று மத்­திய அரசு கடந்த ஆண்டு அறி­வித்து இருந்தது. முதல் கட்­ட­மாக ‘ஸ்மார்ட் சிட்­டி’க்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்ள 20 நக­ரங்களின் பட்­டி­யலை மத்­திய அரசு வெளி­யிட்­டது. அதில் முதல் கட்­ட­மாக புனே, அக­ம­தா­பாத், புவ­னேஸ்­வர், ஜபல்­பூர், கொச்சி, காக்­கி­நாடா, ஜெய்ப்­பூர்,சென்னை, கோவை உள்­ளிட்ட 20 நக­ரங்கள் முதற்­கட்­ட­மாக தேர்வு செய்­யப்­பட்­டன.

‘டாட்டா’ குழுமத்திற்கு 7 மணி நேரத்தில் ஏராளமான இழப்பு

மும்பை: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியான நிலையில் பிரிட்டன் மண்ணில் அதிகளவில் முதலீடு செய்திருக்கும் பன்னாட்டு நிறுவனப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் டாட்டா குழுமம் வெள்ளிக்கிழமை பல கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் பிரிட்டன் சந்தையில் அதிக வேலை வாய்ப்பை அளித் திருக்கும் பன்னாட்டு நிறுவனங்க ளிலும் டாட்டா குழுமம் முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதாணை: சரிதா நாயருக்கு நாளை மறுதினம் வரை கெடு

அதிபர் சரிதா நாயர்.

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கி வரும் ‘சோலார் பேனல்’ ஊழல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபர் சரிதா நாயர். இவர் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக் கில் பணம் வசூலித்துவிட்டு மோசடி செய்துவிட்டதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சரிதா நாயர் கைது செய்யப்பட்டார். தற்போது பிணை யில் அவர் வெளியில் உள்ளார். இந்த நிலையில் சோலார் பேனல் மோசடியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பதவி வகித்த பல அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு உண்டு என்று சரிதா நாயர் புகார் கூறி இருந்தார்.

லெஸ்டரில் நீடிக்கிறார் வார்டி

லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவுடன் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ஜேமி வார்டி. படம்: ஏஎஃப்பி

லெஸ்டர்: முந்தைய பருவத்தில் லீக்கில் தனது இடத்தைத் தக்க வைக்கவே தடுமாறிய குழு ஒன்று, அடுத்த பருவத்தில் சீறிப் பாய்ந்து பட்டத்தையே தன்வச மாக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியது நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாளரான லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. அக்குழுவின் இந்த அபார எழுச்சிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் இங்கிலாந்து தாக் குதல் ஆட்டக்காரர் ஜேமி வார்டி, 29. தொடர்ந்து 11 ஆட்டங்களில் கோலடித்து புதிய சாதனை படைத்த இவர் 2015-16 இபிஎல் பருவத்தில் மொத்தம் 24 கோல் களைப் புகுத்தினார்.

Pages