You are here

உல‌க‌ம்

பங்ளாதே‌ஷில் சதித் திட்டம் தீட்டிய 10 பேருக்கு மரண தண்டனை

டாக்கா: பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை கடந்த 2000 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்ற வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டின் உச்சநீதி மன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பிரதமர் ஷேக் அவரது சொந்த ஊரில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த போது வெடிகுண்டு வைத்து அவரைக் கொல்ல சிலர் சதித் திட்டம் தீட்டியிருந்தனர். பாதுகாப்புப் படையினர் இந்தக் கொலை முயற்சியை முறியடித்து உரிய நேரத்தில் வெடிகுண்டுகளைக் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர். இந்தக் கொலை முயற்சி தொடர்பாக 25 பேர் மீது டாக்காவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

ஐஎஸ் பிடியில் உள்ள கடைசி நகரைக் கைப்பற்ற ஈராக் தாக்குதல்

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள கடைசி நகரான டல் அஃபாரை திரும்பக் கைப்பற்ற ஈராக்கிய தரைப்படை தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ள தாக அதிகாரிகள் கூறினர். “அந்நகரில் உள்ள ஐஎஸ் போராளிகள் ஒன்று எங்களிடம் சரண் அடைய வேண்டும் அல்லது அங்கேயே மடிய வேண் டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந் தெடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்று ஹைதர் அல் அபாடி தெரிவி த்துள்ளார். மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அவர் இவ்வாறு கூறினார். ஐஎஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மோசுல் நகரை ஈராக்கியப் படை கடந்த ஜூலை மாதம் கைப்பற்றியது.

அமெரிக்காவின் கூட்டுப் பயிற்சியை கடுமையாக சாடியது வடகொரியா

சோல்: அமெரிக்காவும் தென் கொரியாவும் சேர்ந்து மேற் கொள்ளும் ராணுவ கூட்டுப் பயிற்சி இன்று தொடங்குகிறது. இந்நிலையில் அந்தப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ள வடகொரியா அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி கடுமையாக எச்சரித்துள்ளது. ஆபத்தான விளைவுகளைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் செயல்படுவதையே அது காட்டுகிறது என்றும் இத்தகைய சூழல் கொடூரத் தாக்குதலுக்கு வழிவிடும் என்றும் வடகொரியா அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகர் பதவி விலகல்

வா‌ஷிங்டன்: அண்மைய காலமாக அமெரிக்காவில் வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் பதவி நீக்கப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வரிசையில் தற்போது வெள்ளை மாளிகை முக்கிய ஆலோசகரான ஸ்டீவ் பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரு பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதை வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா ஹுக்கபீ சாண்டர்ஸ் உறுதிப்படுத்தினார். திரு பேனனின் பதவி குறித்து வெள்ளை மாளிகை உயர் அதிகாரி ஜான் கெல்லி மறு ஆய்வு செய்ததைத் தொடர்ந்து பேனன் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பத்திரிகை செயலாளர் கூறினார்.

ஹாங்காங்கில் மூவரை விடுவிக்க வெளிநாட்டு அரசியல்வாதிகள் கோரிக்கை

ஹாங்காங்: ஹாங்காங்கில் 2014ஆம் ஆண்டு நடந்த ஆர்ப் பாட்டம் தொடர்பில் கைது செய்யப் பட்ட ஜனநாயக ஆதரவாளர்கள் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு வெளி நாட்டு அரசியல்வாதிகளும் வழக் கறிஞர்களும் மற்ற தொண்டர் களும் கண்டனம் தெரிவித்துள் ளனர். அந்த மூவரையும் விடுதலை செய்யக் கோரி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஃபின்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்: இருவர் பலி, 6 பேர் காயம்

ஹெல்சின்கி: ஃபின்லாந்து நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டுர்கு என்ற நகரில் உள்ள மார்க்கெட் சதுக்கத்தில் மக்கள் அதிகமாக கூடியிருந்த நேரத்தில் அங்கு கையில் கத்தியுடன் வந்த ஒருவன் அங்கிருந்தவர் மீது சரமாரியாக கத்தியால் குத்தியதில் இருவர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். கத்தியால் தாக்கிய அந்த ஆடவர் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அந்த நபர் காலில் காயமடைந்த நிலையில் அவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவர் அத்தகைய செயலில் ஈடுபட்டதற்கு என்ன காரணம்?

ரஷ்யாவில் ஒருவன் கத்தியால் தாக்கியதில் 8 பேர் காயம்

மாஸ்கோ: ரஷ்யாவின் சர்கட் நகரில் தெரு வழியாக நடந்து சென்றவர்களை ஒருவன் கத்தியால் தாக்கியதில் 8 பேர் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். அந்த ஆடவரை போலிசார் சுட்டுக்கொன்றனர். தாக்குதலில் காயம் அடைந்த வர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செய்தி நிறுவனத் தகவல் தெரிவித்தது. அந்த ஆடவர் எதனால் அத்தகைய செயலில் ஈடுபட்டார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலிசார் கூறினர். அந்த ஆடவர் மனநல பிரச்சினையால் பாதிக்கப் :பட்டிருந்திருக்கலாம் என்று போலிசார் கூறியதாக டாஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வடகொரியாவுக்கு எதிராக ஜப்பான் - அமெரிக்கா கூட்டணி

படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், மிகக் கடுமையான ராணுவ விளைவுகளை அது சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க தற்காப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் கடந்த வியாழக் கிழமை வா‌ஷிங்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், ஜப்- பானின் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனொ மற்றும் அதன் தற்காப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடெரா ஆகியோர் கலந்து கொண்ட செய்தி யாளர் கூட்டத் தில் அவ்வாறு கூறப்பட்டது. வா‌ஷிங்ட னில் நடந்த முக்கியம் வாய்ந்த “டு ப்ளஸ் டு” சந்திப்பின் பெரும் பகுதி இப்பிரச்சினையை சார்ந்தே இருந்தது.

வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் வாகனங்களைப் பயன்படுத்தியே தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 14ஆம் தேதி பிரான்ஸ் நகரான நைஸில் கூட்டத்திற்குள் வேன் புகுத்தப்பட்டதில் 86 பேர் மாண்டனர். கடந்த டிசம்பர் 19ஆம் தேதி பெர்லின் நகரில் கிறிஸ்மஸ் சந்தைக் கூட்டத்திற் குள் லாரியைப் புகுத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். இவ்வாண்டு மார்ச் 22ஆம் தேதி லண்டன் நகரின் கூட்டத்திற்குள் காரை புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் நால்வர் மாண்டனர். கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் லாரி மூலம் ஐவர் கொல்லப்பட்டனர்.

இந்தோனீசியா: 92,000 கைதிகளுக்கு மன்னிப்பு

ஜகார்த்தா: இந்தோனீசியா தனது 72வது சுதந்திர நாளை நேற்று முன்தினம் கோலாகலமாகக் கொண் டாடியது. அதனையொட்டி அந்நாட்டில் 92,817 சிறைக் கைதி- களுக்கு மன்னிப்பு வழங்கப் பட்- டுள்ளது. சட்டம், மனித உரிமைகளுக்- கான அமைச்சர் யாசோன்னா எச் லோலி இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்தார். மன்னிப்பு வழங்கப்பட்ட கைதி களில் 90,362 பேருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது, 2,444 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Pages