ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்டக் கூடம் அமைக்க மலேசியா திட்டம்

கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்டக் கூடம் அமைக்க மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 128.5 பில்லியன் வெள்ளி செலவில் உருவாக்கப்பட்ட ஃபாரஸ்ட் சிட்டிக்கு இந்த திட்டம் புத்துயிர் கொடுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் திட்டங்களில் சூதாட்டக் கூடங்கள் அமைப்பது குறித்து முன்மொழியப்பட்டு உள்ளதாக இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.

ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம், ஒருங்கிணைந்த வணிகம் மற்றும் முதலீட்டு மையமாக விளங்கக்கூடும். அதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மேலும் எளிமையாகும் என்று கூறப்படுகிறது.

மலேசியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஜோகூர் பொருளியல் ரீதியாக வேகமாக வளர்ந்தும் வருகிறது.

அண்மையில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், மலேசிய மாமன்னரும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தருடன் இணைந்து பெர்ஜாயா கார்ப் நிறுவனத்தின் வின்சென்ட் டான், கெந்திங் குரூப் நிறுவனத்தின் லிம் காக் தேயை சந்தித்ததாக புளூம்பர்க் செய்தி வெளியிட்டிருந்தது.

மலேசியாவில் உள்ள ஒரே சூதாட்டக் கூடம் கெந்திங் நிர்வாகத்தில் உள்ளது. மேலும் அது செந்தோசாவில் உள்ள ரெசார்ட் வோர்ல்ட் சொந்தோசாவிலும் நிர்வாகம் செய்கிறது.

ஃபாரஸ்ட் சிட்டியை சிறப்பு நிதி மையமாக மாற்றி அங்கு செயல்படும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை, எளிதாக விசா சேவை வழங்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் நாட்டில் இரண்டாவது சூதாட்டக்கூடம் அமைப்பது அரசியல் ரீதியாக அன்வார் இப்ராகிமுக்கு பின்னடைவைத் தரலாம் என்றும் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!