உல‌க‌ம்

கெய்ரோ: ஹூதி படையினர், ஏடன் வளைகுடாவில் எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பல் மீது இரு ஏவுகணைகளைப் பாய்ச்சியது; கப்பல்களைக் குறிவைப்பதற்கென உள்ள அந்த ஏவுகணைகளில் ஒன்று, எம்/வி எம்எஸ்சி ஸ்கை II கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியம் (சென்ட்காம்) செவ்வாய்க்கிழமையன்று (5 மார்ச்) தெரிவித்தது.
தோக்கியோ: ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜப்பானின் யமனாஷி மாநிலத்திலிருந்து ஃபூஜி மலையில் ஏறுவோர் கூடுதல் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மெல்பர்ன்: தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலிய வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிக்க பத்தாண்டு விசா, 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$1.75 பில்லியன்) நிதி வழங்க ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீசி திட்டமிட்டுள்ளார்.
கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதீன் யாசின் தொடர்பான 232.5 மில்லியன் ரிங்கிட் (S$66.11 மில்லியன்) ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்தது.
வாஷிங்டன்: இவ்வாண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்து அதிபர் ஜோ பைடனுக்கு எதிராகப் போட்டியிட ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்களிப்பு நடத்தப்படுகிறது.