யமனாஷியிலிருந்து ஃபூஜி மலையில் ஏற கூடுதல் கட்டணம்

தோக்கியோ: ஜூலை 1ஆம் தேதியிலிருந்து ஜப்பானின் யமனாஷி மாநிலத்திலிருந்து ஃபூஜி மலையில் ஏறுவோர் கூடுதல் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

யமனாஷியிலிருந்து ஃபூஜி மலையில் ஏறுவோரிடமிருந்து தலா 2,000 யென் (S$18) வசூலிக்கப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் யமனாஷியிலிருந்து ஃபூஜி மலையில் ஏறுகின்றனர்.

எனவே, மலை உச்சியில் கூட்ட நெரிசல் ஏற்படாதிருக்க நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக என்எச்கே செய்தி நிறுவனம் தெரிவித்தது.

நுழைவுக் கட்டணம் ஒருபுறம் இருக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க யமனாஷியிலிருந்து ஃபூஜி மலையில் ஏறும் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 1,000 யென் வசூலிக்கப்படுவது ஏற்கெனவே நடப்பில் உள்ளது.

யொஷிடா பாதையின் நுழைவாயிலில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஃபூஜி மலைக்குச் செல்லும் நான்கு பாதைகளில் யொஷிடா பாதையும் ஒன்று.

மற்ற மூன்று பாதைகளைப் பயன்படுத்துபவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!