இஸ்‌ரேல் மீதான உலக நீதிமன்ற உத்தரவின் சட்ட தாக்கங்களை சிங்கப்பூர் ஆராய்கிறது: விவியன்

காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து அனைத்துலக நீதிமன்றம் அறிவித்துள்ள தற்காலிக நடவடிக்கைகளின் சட்ட தாக்கங்களை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவை செயல்படுத்தப்பட உரிய சட்ட நடைமுறைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துலக நீதிமன்றத் தீர்ப்புகள் பொதுவாக நாடுகளைக் கட்டுப்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், “அனைத்துலக மனிதநேயச் சட்டம் உட்பட அனைத்துலகச் சட்டத்துக்கு மதிப்பளிப்பது என்பது சிங்கப்பூரின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாக எப்போதும் இருந்து வந்துள்ளது,” என்றார்.

தென் ஆப்பிரிக்கா கோரும் அத்தகைய நடவடிக்கைகளுக்கான கோரிக்கை குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாடு பற்றி சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிமின் கேள்விக்கு அளித்த பதிலில் டாக்டர் விவியன் இவ்வாறு கூறினார்.

காஸா மீது இஸ்ரேல் நடத்திய ராணுவத் தாக்குதலை இனப்படுகொலை என்று அறிவிக்கவும், காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும் தென் ஆப்பிரிக்கா அனைத்துலக நீதிமன்றத்தில் விண்ணப்பத்துள்ளது.

1948 இனப்படுகொலை ஒப்பந்த விதி 1இன் கீழ் உறுப்பு நாடுகளின் ஒப்பந்தக் கடப்பாடுகளைக் கருத்தில்கொண்டு வெளிநாட்டு, ராஜதந்திர உறவுகள் குறித்து சிங்கப்பூர் என்ன நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் திரு ஸுல்கர்னைன் கேட்டார். இஸ்ரேல் உட்பட 153 நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளன அல்லது ஒப்புக்கொண்டுள்ளன. அவை இனப்படுகொலை செய்யக்கூடாது என்ற கடப்பாட்டைக் கொண்டுள்ளன.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஜனவரி 26ல் அனைத்துலக நீதிமன்றம், இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்துவது, இனப்படுகொலைக்கு நேரடியான, பொது தூண்டுதல் செய்வதைத் தடுப்பதும் தண்டிப்பதும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்த உடனடியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட ஆறு தற்காலிக நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டது.

நாஸிக்களின் இன அழிப்பின்போது யூதர்கள் பெருமளவில் கொல்லப்பட்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்டது. இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன, அல்லது சமயக் குழுவினரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் செயல்கள் என்று அது வரையறுக்கிறது.

குழுவினரின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் அல்லது மனரீதியான தீங்கை ஏற்படுத்துவது, வேண்டுமென்றே உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலைமைகளை உருவாக்கி குழுவின் அழிவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவது ஆகியவை அடங்கும்.

நெதர்லாந்து ஹேக் நகரைத் தளமாகக் கொண்ட நீதிமன்றம், இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்களை இஸ்ரேல் பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவுக்கு இணங்குவது குறித்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று இஸ்ரேல் நிராகரித்துள்ளது. அத்துடன், தென் ஆப்பிரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்புடன் ஒத்துழைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

அனைத்துலக நீதிமன்றத்தின் முடிவுகள் இறுதியானவை, மேல்முறையீடு இல்லாதவை என்றாலும், நீதிமன்றம் அவற்றை செயல்படுத்த வழியில்லை.

உடனடி மனிதாபிமான அமைதிப்பேச்சு அல்லது சண்டைநிறுத்தம், பிணையாளிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிப்பது, காஸாவுக்கு அவசர, தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்குவது ஆகிய தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐநா சபையில் சிங்கப்பூர் வாக்களித்துள்ளதையும் டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!