சிங்கப்பூருக்கும் தென்னமெரிக்க நாடுகளுக்கும் இடையே புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

சிங்கப்பூர், தென்னமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகியவற்றுடன் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.

டிசம்பர் 8ஆம் தேதி அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நாடுகளுடன் சிங்கப்பூர் செய்துகொண்ட முதல் ஒப்பந்தம் அது.

சென்ற ஆண்டு ஜனவரி மாதம், சிலி, கொலம்பியா, மெக்சிகோ, பெரு ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது.

ஆக அண்மைய ஒப்பந்தம், குறைவான வரிகள், வெளிப்படையான முதலீட்டுச் சூழல்கள் ஆகியவற்றின் மூலம், மேலும் சுமுகமான வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு வகைசெய்யும் என்று சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சும், வர்த்தக, தொழில் அமைச்சும் கூறின.

வர்த்தகங்களை எளிதாக்கும் செயல்முறை போன்ற அம்சங்களில் ஒத்துழைப்பையும் அது வலுப்படுத்தும்.

அந்த ஒப்பந்தம் தொழில்முனைப்பை அதிகரித்து, மின்னிலக்கமயமாதலை விரைவுபடுத்தி, நீடித்து நிலைக்கக்கூடிய மேம்பாட்டையும் உணவு விநியோகப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து நாடுகளில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் அது உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் அந்த நான்கு நாடுகளின் அமைச்சர்களும், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். வர்த்தக, தொழில் துணை அமைச்சர் அல்வின் டானும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நான்கு ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற ஆழமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார். இது, தென்கிழக்காசியாவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே புதிய பாலமாக அமைவதாகவும் அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!