மனஅழுத்தத்தைக் குறைக்கும் உணவு வகைகள்

மனஅழுத்தம் ஒருவரின் அன்றாட வாழ்வை மிகவும் பாதிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் உட்பட பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.

மனஅழுத்தத்திற்குப் பல காரணங்களும் அதைக் குறைக்க பல வழிமுறைகளும் இருந்தாலும், மனநலனுடன் தொடர்புடைய சத்தான உணவுமுறையைப் பின்பற்றுவது மனநிலையை மேம்படுத்தி, அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் குறைக்க உதவும்.

ஒமேகா-3 கொழுப்புகள், வைட்டமின் டி, அமினோ அமிலங்கள் அதிகம் உள்ள சால்மன், டுனா, டிரவுட், மத்தி உள்ளிட்ட மீன் வகைகள், மனித உடலில் டோபமைன், செரோடோனின் போன்ற வேதிப்பொருள்களின் உற்பத்திக்கு வழிவகுக்கின்றன. மகிழ்ச்சியான உணர்வைத் தரும் இந்த வேதிப்பொருள்கள் மனநிலையை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.

மெக்னீசியம் சத்து, நார்ச்சத்து, பாலிஃபினால்கள், கேரோட்டினாய்டு, அமினோ அமிலங்கள் நிறைந்த பீன்ஸ், பயறு வகைகளை உட்கொள்வோருக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 26 விழுக்காடு குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெர்ரி உட்பட பழவகைகள், காய்கறிகளில் உள்ள உடலுக்கு நன்மை செய்யும் வேதிப்பொருள்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை மனநிலை ஒழுங்குமுறைக்கு உதவுகின்றன.

‘மாட்சா’ எனும் தூள் செய்யப்பட்ட பச்சைத் தேயிலை அதிக அளவில் எல்-தியானைன் எனும் முக்கிய அமினோ அமிலத்தைக் கொண்டுள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் செயல் திறனை அதிகரித்தல், மனத்துக்கு கிளர்ச்சியூட்டும் குளூட்டமேட்டின் சுரப்பைக் குறைத்தல், காமா - அமினோபியூட்ரிக் அமில சுரப்பை அதிகரித்தல் ஆகியவை மூலம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம், சிட்ரஸ் வகைப் பழங்கள் உட்பட பல பழங்களில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பச்சைக் கீரைகள் உடலுக்கு வைட்டமின் சி, கேரோட்டினாய்டு, மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்கி, உடலின் உணர்திறனை அதிகரித்து மனப் பதற்றம், கவலை ஆகியவற்றைக் குறைக்கின்றன.

‘ஹெம்ப் சீட்ஸ்’ எனும் வகை உலர் விதைகள் உடலுக்குத் தேவையான மெக்னீசியம் அளவில் 50 விழுக்காட்டை அளிக்கின்றன. தவிர உடலில், துத்தநாகம் போன்ற சில அத்தியாவசிய வேதிப்பொருள்களின் அளவில் சமநிலை காண்பதன் மூலம் மனநல மேம்பாட்டுக்கு இவை உதவுகின்றன.

கொக்கோ பொருள்கள் மூளையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், மனநிலையை மேம்படுத்தவும் மனஅழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

மெக்னீசியம், நார்ச்சத்து நிறைந்த அவகாடோ பழம் உளவியல் துன்பத்தையும், பதற்றத்தையும் குறைப்பதோடு, உடலின் அழற்சியின் அளவைக் குறைத்து மனஅழுத்தத்தைப் போக்க உதவும்.

சவகிரவுட் (Sauerkraut), கிம்ச்சி ஆகிய புளிக்கவைக்கப்பட்ட உணவுகள் நல்ல பாக்டீரியாக்கள் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மனநலனை மேம்படுத்த உதவுகின்றன.

தவிர, அதிக அளவிலான காபி, சர்க்கரை, மது, செயற்கை இனிப்பூட்டிகள் ஆகியவற்றை உண்ணும்போது, மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு மனஅழுத்தம், பதற்றம் போன்ற உணர்வுகள் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!