அடுத்த ஆண்டு வரை இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கான தடை நீடிக்கலாம்

புதுடெல்லி: உலகில் அரிசி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் இந்தியா, அடுத்த ஆண்டுவரை வெளிநாடுகளுக்கு அரிசி விற்பதற்கான கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது, 2008ஆம் ஆண்டின் உணவு நெருக்கடிக்குப் பிறகு முக்கிய தானியங்களை அதிகபட்ச விலையில் வைத்திருக்கும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தகவல் தெரிவித்தது.

கடந்த பத்து ஆண்டுகளில் குறைவான விலை, போதுமான கையிருப்பு காரணமாக உலகின் முன்னணி அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா இருந்து வருகிறது.

உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் அதன் பங்கு மட்டும் 40 விழுக்காடு. ஆப்பிரிக்க நாடுகள், குறிப்பாக பெனின், செனகல் நாடுகள் அதிகமாக இந்தியாவிடமிருந்து அரிசியை வாங்குகின்றன.

ஆனால், 2024ஆம் ஆண்டில் மறுபடியும் ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமரான நரேந்திர மோடி, உள்நாட்டில் அரிசி விலை உயர்வைத் தடுக்கவும் உள்நாட்டு பயனீட்டாளர்களைப் பாதுகாக்கவும் அரிசி மீதான கட்டுப்பாடுகளை இறுக்கி வருகிறார்.

“உள்நாட்டில் அரிசி விலை ஏறுமுகமாக இருந்தால் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது,” என்று இந்தியா, ஆசிய, முன்னைய ஜப்பானிய நோமுரா ஹோல்டிங்ஸ் ஆகியவற்றுக்கான தலைமைப் பொருளியலாளர் சோனல் வர்மா தெரிவித்தார்.

“தேர்தலுக்குப் பிறகும் உள்நாட்டு அரிசி விலை நிலையாக இல்லையென்றாலும் கட்டுப்பாடுகள் தொடரும்,” என்றார் அவர்.

இந்தியா ஏற்றுமதிக்கான வரியை அமல்படுத்தி, குறைந்தபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்டில் 15 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அரிசி விலை அதிகரித்தது.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அரிசி இறக்குமதியைத் தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளன.

அக்டோபரிலும் அரிசி விலை ஓராண்டுக்கு முன்பு இருந்ததைவிட 24 விழுக்காடு அதிகரித்தது என்று ஐநா உணவு, வேளாண் அமைப்பு கூறியது.

மோடி அரசாங்கம், உள்நாட்டில் போதுமான அரிசி விநியோகம் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறது என்றும் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த விரும்புகிறது என்றும் இந்தியாவின் அரிசி ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதிக்கும் அரிசி ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் பி.வி. கிருஷ்ணா ராவ் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு வாக்களிப்பு முடியும் வரை ஏற்றுமதிக்கான தடையை இந்திய அரசாங்கம் வைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், எல் நினோ பருவநிலை மாற்றம் காரணமாக ஆசியாவில் விளைச்சல் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், உலகின் அரிசி கையிருப்பு தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக வீழ்ச்சியடையலாம்.

அப்போது அரிசி சந்தையில் மேலும் நெருக்கடி ஏற்படலாம்.

உலகளவில் அரிசி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள தாய்லாந்து, வறண்ட பருவநிலை காரணமாக 2023-24 ஆண்டில் உற்பத்தி ஆறு விழுக்காடு வீழ்ச்சியடையும் என்று கூறி அச்சுறுத்தி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!