பாலஸ்தீனத்துக்கு 32 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா

புதுடெல்லி: இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா இரண்டாம் கட்டமாக 32 டன் நிவாரணப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தது.

முன்னதாக கடந்த அக்டோபர் 22ஆம் தேதி, பாலஸ்தீன மக்களுக்கு 6.5 டன் மருத்துவ உதவிப் பொருள்களையும், 32 டன் பேரிடா் நிவாரணப் பொருள்களையும் இந்தியா அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 7ஆம் தேதி காஸாவில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளைப் பாய்ச்சினர் ஹமாஸ் குழுவினர், அத்துடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கிட்டத்தட்ட 1,200 பேரை கொன்றனர். 240 பேரை சிறைபிடித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் காஸாவில் இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரையிலும் 5,000 குழந்தைகள் உள்ளிட்ட 12,300 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

காஸாவின் தெற்குப் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்தனர்.

அந்தத் தாக்குதலை அடுத்து அஙகிருந்த ஏராளமான குடியிருப்பாளர்கள் இரண்டு பள்ளிக் கூடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹமாஸ் குழுவுக்கு எதிராக தனது தாக்குதலை காஸாவின் தெற்குப் பகுதியில் மேலும் விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.. அதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினரைத் துடைத்தொழிக்கப் போவதாக இஸ்ரேல் சூளுரைத்தது. அதனையடுத்து காஸா பகுதியை ஒரு மாதத்திற்கு மேல் முற்றுகையிட்டு மிகக் கொடூரமாகக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது இஸ்ரேல். மேலும் அதன் ராணுவத்தினர் தரைவழியாக காஸாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் ஏராளமான பாலஸ்தீன மக்கள் உணவு, உடை, தங்க இடமின்றி அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உலக நாடுகள் நிவாரணப் பொருள்கள் அனுப்பிய வண்ணம் உள்ளன. அவ்வகையில் இந்தியா, ஞாயிற்றுக்கிழமை (19-11-2023) இரண்டாவது முறையாக நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்திலிருந்து இந்திய விமானப் படையைச் சோ்ந்த சி-17 என்ற போக்குவரத்து விமானம் மூலம் இந்தப் பொருள்கள் எகிப்தின் எல்-அரிஷ் விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை தொடர்ந்து இந்தியா வழங்கி வருகிறது என்று பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!