150 மி. ரிங்கிட் கோரி அன்வார் மீது மகாதீர் அவதூறு வழக்கு

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம்­மி­டம் 150 மில்­லி­யன் ரிங்­கிட் (S$44.78 மில்லியன்) இழப்பு கோரி முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது அவ­தூறு வழக்­குத் தொடுத்­துள்­ளார். தாமும் தமது குடும்­ப­மும் பத­வி­யைப் பயன்­ப­டுத்தி செல்வச் செழிப்­பு­டன் வாழ்ந்­த­தாக திரு அன்­வார் கூறி­ய­தற்கு எதி­ராக இந்த வழக்­கைத் தொடுத்­தி­ருப்­ப­தாக டாக்­டர் மகா­தீர் கூறி­யுள்­ளார்.

ஷா ஆலம் உயர் நீதி­மன்­றத்­தில் கடந்த புதன்­கி­ழமை தொடுக்­கப்­பட்ட வழக்­கில் பொது இழப்­பீ­டாக 50 மில்­லி­யன் ரிங்­கிட்­டும் தமக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்கு 100 மில்­லி­யன் ரிங்­கிட் இழப்­பீ­டும் அவர் கோரி­யுள்­ளார். கடந்த மார்ச் மாதம் திரு அன்­வார் பிகே­ஆர் கட்­சி­யின் மாநாட்­டில் பேசும்­போது தம்­மைப் பற்றி அவ­தூ­றான கருத்­து­களை வெளி­யிட்­ட­தாக மனு­வில் டாக்­டர் மகா­தீர் குறிப்­பிட்­டுள்­ளார்.

பில்­லி­யன் கணக்­கான சொத்­து­க­ளைச் சேர்த்­த­தா­க­வும் வரி­கள் செலுத்­து­வ­தைத் தவிர்த்­த­தா­க­வும் தம்­மீது திரு அன்­வார் அவ­தூறு பரப்­பி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். மேலும், தாம் ஒரு இன­வாதி என்­ப­து­போல அவர் சித்­தி­ரித்­துள்­ள­தா­க­வும் டாக்­டர் மகா­தீர் தமது மனு­வில் கூறி­யுள்­ளார். ஒரு முன்­னாள் பிர­த­மர் என்ற முறை­யில் உள்­நாட்­டி­லும் உலக அரங்­கி­லும் தமக்கு இருக்­கும் செல்­வாக்­கைக் கீழ­றுப்­ப­தோடு தம் மீது தவ­றான கண்­ணோட்­டத்தை இந்த அவ­தூ­றுக் கருத்­து­கள் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

மார்ச் 18 பிகே­ஆர் கட்சி மாநாட்­டில் பேசிய திரு அன்­வார், பெயர் குறிப்­பி­டா­மல், “22 ஆண்டு கள் பத­வி­யில் இருந்த பின்னர், மேலும் 22 மாதங்­கள் பத­வி­யில் இருந்­த ஒருவர் தமது பத­வி­யைப் பயன்­ப­டுத்தி தம்­மை­யும் தமது குடும்­பத்­தை­யும் வளப்­ப­டுத்­திக்­கொண்­டார்,” என்று கூறினார்.

அது பற்றி அப்­போது உட­ன­டி­யா­கக் கருத்­துத் தெரி­வித்த டாக்­டர் மகா­தீர், “நான்­தான் 22 ஆண்­டு­களும் பின்­னர் 22 மாதங்­களும் பத­வி­யில் இருந்­தேன். எனவே அன்­வா­ரின் குற்­றச்­சாட்டு என்­னைப் பற்­றி­யது,” என்று கூறி­யி­ருந்­தார்.

தற்­போது 97 வய­தா­கும் டாக்­டர் மகா­தீர், 1981ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை­யி­லும் (22 ஆண்டு) அதன் பின்­னர் 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை­யி­லும் (22 மாதம்) மலே­சி­யா­வின் பிர­த­ம­ரா­கப் பதவி வகித்­தார். இருப்­பி­னும் கடந்த ஆண்டு நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் லாங்­கா­வித் தொகு­தி­யில் அவர் தோல்­வி­யைத் தழு­வி­னார்.

இந்­நி­லை­யில், தம்­மீது தெரி­வித்த அவ­தூறு கருத்­து­க­ளைத் திரும்­பப் பெறா­விட்­டால் சட்ட நட­வ­டிக்­கையை எதிர்­நோக்க வேண்டி இருக்­கும் என்று மார்ச் 27ஆம் தேதி டாக்­டர் மகா­தீர், வழக்­க­றி­ஞர் மூலம் திரு அன்­வா­ருக்­குக் கடி­தம் அனுப்­பி­னார்.

அதற்­குக் கடந்த மாதம் பதி­ல­ளித்த திரு அன்­வா­ரின் வழக்­க­றி­ஞர்­கள், எந்­த­வி­தக் குற்­றச்­சாட்­டுக்­கும் நீதி­மன்­றத்­தில் பதி­ல­ளிக்­கத் தயார் என்று பதில் அனுப்­பி­னர்.

தற்­போது தாக்­கல் செய்­தி­ருக்­கும் அவ­தூறு வழக்­கில், “நான் பிர­த­ம­ராக இருந்­த­போது என்­னு­டைய தலை­யீடு எது­வும் இல்­லா­ம­லேயே எனது பிள்­ளை­கள் அனை­வ­ரும் தங்­க­ளது தொழி­லில் சிறந்து விளங்­கி­னார்­கள்,” என்று டாக்­டர் மகா­தீர் கூறி­யுள்­ளார்.எனவே திரு அன்­வார் தமது கருத்­து­க­ளைத் திரும்­பப் பெறு­வ­தோடு நிபந்­த­னை­யற்ற மன்­னிப்­புக் கோர­வேண்­டும் என நீதி­மன்­றம் உத்­த­ர­விட தாம் விரும்­பு­வ­தாக அவர் தமது மனு­வில் தெரி­வித்­துள்­ளார்.

அவ­தூறு வழக்­குத் தொடுக்­கப்­பட்டு இருப்­பது குறித்து நேற்று முன்­தி­னம் கருத்­துக் கூறிய பிர­த­மர் அன்­வார், “இதனை எனது வழக்­க­றி­ஞர்­கள் பார்த்­துக்­கொள்­வார்­கள்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!