You are here

திரைச்செய்தி

வசூலைக் குவித்த ‘விக்ரம் வேதா’

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி படம் என்றால் வசூலுக்கு குறைவிருக்காது. அவருடைய படத்தை திரையரங்க உரிமையாளர்கள் நஷ்டம் ஏற்படாது என்று நம்பி வாங்கி வருகின்றனர். இவர் அண்மையில் நடித்திருந்த ‘விக்ரம் வேதா’ படமும் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது. அமெரிக்காவில் இந்தப் படத்தின் வசூல் 6 லட்சம் டாலர்களைக் கடந்துள்ளது. புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

நேர்மைக்கு கிடைக்க இருக்கும் பரிசுகள்

ஓவியா

சென்ற வாரம் வரையிலும் எங்கு திரும்பினாலும் ‘ஓவியா ஓவியா’தான். சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் முணுமுணுத்த ஒரே பெயர் ‘ஓவியா’. இப்படியும் ஒரு பெண்ணா என்று உலகத்தில் இருக்கும் பெரும்பாலான தமிழர்களால் பாராட்டப்பட்டவர் ஓவியா. ஏன் இத்தனை பாராட்டு என்கிறீர்களா? தமிழ்நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘பிக் பாஸ்’ என்னும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஓவியாவின் நேர்மையைப் பார்த்து வியக்காதவர்கள் யாருமே இல்லை எனலாம். “நேர்மைன்னா அது ஓவியாதான்” என்று கமல் வாயினால் பாராட்டு பெற்றார் ஓவியா.

ஹாலிவுட்டில் உருவாகும் சிம்பு படம்

சிம்பு

பல்வேறு சர்ச்சைகள், தோல்விகளை சந்தித்தாலும் சிம்பு அசரமாட்டேன் என்கிறார். இதோ, அண்மைய ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்வியைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கான பணிகளில் தீவிரமாகிவிட்டார். சிம்புவே இயக்கப் போகும் இந்தப் படத்தை, ஹாலிவுட்டில் உருவாக்கி, அங்கேயே வெளியிடவும் போகிறாராம். “இது எந்த மாதிரியான படம் என்பது தெரியவில்லை. இதுகுறித்த தகவல்களை விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடுவார்,” என்கிறார்கள் சிம்புவுக்கு நெருக்கமானவர்கள். சிம்பு இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். யுவன் இசையமைக்கிறார்.

காஜல் தொடுத்த வழக்கு தள்ளுபடி

 காஜல்

தான் நடித்துள்ள தொலைக்காட்சி விளம்பரத்துக்கு தடை கோரி காஜல் அகர்வால் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பிரபல தனியார் நிறுவனம் தயாரித்த தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்திருந்தார் காஜல். இது கடந்த 2008ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது. அப்போது ஓராண்டுக்கு மட்டுமே அந்த விளம்பரப் படத்தை ஒளிபரப்ப வேண்டும் என்று இருதரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டதாம். இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை மீறி எண்ணெய் நிறுவனம் ஓராண்டுக்கு பிறகும் விளம்பரத்தை வெளியிட, ஒட்டுமொத்தமாக அந்த விளம்பரத்தை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காஜல்.

தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையைப் பெற கடும் போட்டி

‘மெர்சல்’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய்.

புதிய வரி விதிப்பால் திரைப்படத்துறை வெகுவாகப் பாதிக்கப்படும் என்று பலரும் கூவிக் கொண்டிருந்தனர். ஆனால் நடப்பவை எல்லாம் அதற்கு நேர்மாறாகவே உள்ளன. திரையரங்குகளில் கூட்டம் குறை யும் என்றனர். ஆனால் ‘விக்ரம் வேதா’, ‘மீசைய முறுக்கு’ ஆகிய இரு படங்களும் அந்தக் கவலையைப் பொய்யாக்கிவிட்டன. இந்நிலையில் மீண்டும் திரைப் படங்களின் தொலைக்காட்சி ஒளி பரப்பு உரிமைக்குக் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அஜித், விஜய், சூர்யா ஆகிய மூவரும் தற்போது நடித்து வரும் படங்களின் தொலைக்காட்சி உரி மையை கடும் போட்டிக்கு இடையே தொலைக்காட்சி நிறுவனங்கள் கைப்பற்றி இருக்கின்றன.

மாதவன்: பிரச்சினைகள் முளைத்தன

 மாதவன்

நடப்பதெல்லாம் நன்மைக்கே எனக் கருதினால் நல்லதே விளையும் என்கிறார் மாதவன். ‘விக்ரம் வேதா’ வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருப்பவர், அப்படத்தை வெளியிடுவதில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டதாக அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதுவரை ரூ.50 கோடி வசூல் கண்டுள்ளதாம். “பட வெளியீட்டுத் தேதியைத் தள்ளி வைக்கலாம் என்ற பேச்சு வந்தது. ஏனென்றால் அப்போதுதான் சென்னை திரையரங்க உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் எல்லாம் நன்மைக்கே எனக் கருதினோம்.

ராம் இயக்கத்தில் ‘தரமணி’

‘தரமணி’ படப்பிடிப்பில் இயக்குநர் ராம், ஆண்ட்ரியா.

ராம் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள படம் ‘தரமணி’. இது இளையர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்ட படம் என்கிறார். குறிப்பாக, பல்வேறு கலாசாரம், பலவிதமான பின்னணியிலிருந்து சென்னைக்கு ஏராளமான இளை யர்கள் வருகின்றனர். அந்த இளை யர்களைப் பற்றிய பொதுவான படமாக இருக்குமாம். வசந்த் ரவி, ஆண்ட்ரியா ஜோடி சேர்ந்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் படம் குறித்த சில தகவல்களை வெளி யிட்டுள்ளார் ராம். பலம் வாய்ந்த பெண் கதா பாத்திரத்துடன் தைரியமாக, வெளிப் படையாகப் பேசும் படங்களுக்கு என்றுமே இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக் கும் என்ற நம்பிக்கையில் ‘தரமணி’யை உருவாக்கியதாக ராம் சொல்கிறார்.

‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து ஹன்சிகா விலகல்

ஹன்சிகா

பெரும் பொருட்செலவில் பிரம் மாண்டமாகத் தயாராக உள்ளது ‘சங்கமித்ரா’ திரைப்படம். இதில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவரும் தற் போது பேச்சுவார்த்தையில் இருந்து விலகியுள்ளாராம். இதனால் நாயகி கதாபாத்திரத்துக்கு பல்வேறு முன்னணி நாயகிகளிடம் படக் குழுவினர் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஓவியாவைக் குற்றம்சாட்டுகிறார் நமீதா

‘பிக்பாஸ்’ புகழ் ஓவியாவைத் தாம் காதலிப் பதாக வெளியான தகவலை திட்டவட்ட மாக மறுத்துள்ளார் சிம்பு. இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதாவோ ஓவியாவை வறுத்தெடுத்துள்ளார். இது குறித்து நமீதா வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கையில், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. “தினமும் காலையில் புன்னகையுடன் கண்விழிக்கும்போது, இன்றைய தினம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றே நினைப்போம். ஆனால் அந்த எண்ணத்தையும் மன அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக ஒருவர் செயல்பட்டார். அவரைப் புறந்தள்ளிவிட்டு நடந்தால் மீண்டும் குறுக்கிட்டார்.

சூர்யாவுக்கு ஜோடியானார் ரகுல்

தற்போதுள்ள இளம் நாயகிகளில் ரகுல் பிரீத்சிங் காட்டில்தான் வாய்ப்புகள் அடைமழையாகப் பொழிந்து கொண்டிருக்கிறது. கார்த்தியைத் தொடர்ந்து அவரது அண்ணன் சூர்யாவுடனும் ஜோடி சேர்ந்துள்ளார் ரகுல். தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்ததும் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்துக்குத்தான் ரகுல் ஒப்பந்தமாகி உள்ளார். செல்வராகவன் இப்போது ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்குகிறார். அப்பணி முடிந்ததும் சூர்யாவின் படத்தைத் துவங்க உள்ளார்.

Pages