You are here

தலையங்கம்

அஷ்வின்கள் நிறைந்த சமூகமாவோம்

பள்ளிக்கூடம் சென்றுவிட்டு நண்பர்களுடன் வீட்டுக்குத் திரும்பிச்சென்றுகொண்டு இருந்த ஒரு 12 வயது பையன், திடீரென்று சாலையில் வாகன விபத்து நிகழ்ந்ததைக் கண்டு தன்னை அறியாமலேயே ஓடிச்சென்று பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி இருக்கிறான். ‘ஆபத்து போகாதே’ என்று அவனை நண்பர்கள் தடுத்தனர். பெரியவர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. பலரும் விபத்தைப் படம் எடுத்துக்கொண்டும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டும் நின்றிருந்தனர்.

அஞ்சோம், ஆயத்தமாவோம்

உலகில் ஒடுக்க முடியாத அளவுக்கு பயங்கரவாதம் உறுதி யாகிவிடுமோ என்ற அச்சம் தலைதூக்கிவிட்டது. பயங்கர வாதத்தின் வடிவமும் பலவகையாக உருமாறிவிட்டன. இன்னமும் உருமாறி வருகின்றன. எந்த நாட்டில் அது எந்த வடிவத்தை எடுக்கும், எந்த வகையில் தலை எடுத்து ஆடும் என்பதைக் கணிக்க முடியாத அளவுக்கு இப்போது உலக பயங்கரவாதச் சூழல் இருக்கிறது. ‘ஐஎஸ்’ அமைப்பு போன்றவை அதிநவீனமானவையாக வும் எங்கும் ஊடுருவும் தன்மை கொண்டவையாகவும் இருப்பதை அப்போதைக்கு அப்போது உலகில் அங்கும் இங்கும் எங்கும் அவை வெளிப்படுத்தி வருகின்றன.

தெள்ளத்தெளிவாக உணர்த்திய வாக்காளர்கள்

தமிழ்நாட்டில், அதன் 15வது சட்டமன்றத்தைத் தேர்ந்து எடுக்க அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலும் அதன் முடிவுகளும் இதுநாள் வரையில் அந்த மாநிலத்தில் நடந்துள்ள பல தேர்தல்களில் இருந்து பல்வேறு வகைகளில் வேறுபட்டதாக இருக்கின்றன. பல தேர்தல்களில் இல்லாதபடி இத்தேர்தலில் ஆறு முனைப் போட்டி இருந்ததும் அதி நவீன தகவல்தொழில் நுட்பங்களும் கணினி இணையச் சமூகத் தளங்களும் தேர்தலில் காட்டிய ஈடுபாடும் மிகவும் புதுமையானவை.

வாக்கும் வக்கும்

தமிழ்நாட்டில் 15வது சட்டமன்றத் தேர்தலில் 234 உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு நாளை நடக்கிறது. அந்த மாநிலத்தில் வசிக்கும் சுமார் 7 கோடி (70 மில்லியன்) பேரில் கிட்டத்தட்ட 5.8 கோடி வாக்காளர்கள் மாநில நிர்வாகத்தை யார் கையில் ஒப்படைப்பது என்பதை நாளை முடிவு செய்கிறார்கள். இவர்களில் 40 மில்லியன் பேருக்கு வயது 50க்கும் குறைவு.

சிங்கப்பூர்-ஆஸ்திரேலியா உறவுக்கு இன்னும் உரம்

ஆசியாவில் தென்கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, நிலப்பரப்பு குறைந்த சிங்கப்பூரும் ஆசிய பசிபிக்கின் முக்கிய முதுகெலும்புகளில் ஒன்றாக இருக்கின்ற, பெரும் நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவும் மிக முக்கியமான ஒரு புதிய உடன் பாட்டில் கையெழுத்திட்டு உள்ளன. 
வர்த்தகம், பொருளியல், புத்தாக்கம், அறிவியல், தற்காப்பு, கல்வி, பயணம், இளையர்கள், கலை கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய அந்த உடன்பாட்டை இரு நாடுகளும் பெரிதும் வரவேற்று இருக்கின்றன.

மனதைத் தொடும் திட்டங்களும் மன நாட்டமும்

மனதைத் தொடும் திட்டங்களும் மன நாட்டமும் சிங்கப்பூரின் புதிய 2016 வரவுசெலவுத் திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்துமுடிந்துவிட்டது. நாட்டுக்கும் வீட்டுக்கும் உதவக்கூடிய ஏராளமான திட்டங்கள், செயல் திட்டங்கள், கொள்கைகள், செலவுத்தொகை, வரவுத் தொகை அனைத்தும் அமைச்சு வாரியாக அறிவிக்கப்பட்டு அவை பற்றி ஆழமாகவும் விரிவாகவும் விவாதிக்கப் பட்டன.

நீரிழிவு நோயை வீழ்த்தும் போரில் களம் காண்போம்

மனித உடல் என்பது மிகப்பெரிய பலதுறைத் தொழிற்சாலை. உடலில் எல்லா ஆலைகளும் செவ்வனே செயல்பட போதிய எரிசக்தி வேண்டும். அந்தச் சக்தியை நாம் உண் ணும் உணவுப்பொருட்கள் மூலம் சர்க்கரை வடிவில் நம் உடல் பெறுகிறது. அப்படி உடலில் சேரும் சர்க்கரைப் பொருட்களை நம் உடல் சிதைத்து அதைச் சக்தியாக மாற்றிக்கொள்கிறது.

ஊழல் புகார்கள் குறைவு மேலும் ஓர் அனுகூலம்

ஊழலுக்கெதிராக பங்காற்றிய அர்ப்பணிப்புக்காக கெளரவிக்கப்பட்டவர்களுடன் புகைப்படமெடுத்துக் கொண்ட பிரதமர் லீ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் புதிய ஊழல் விவகாரங்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 132 ஆகக் குறைந்தது. வந்த புகார்கள் அதிகம் என்றாலும் ஆதாரம் இல்லாமல் புலன்விசாரணையைத் தொடங்கும் அளவுக்குப் போதிய முகாந்திரம் இல்லாமல் இருந்தவை அவற்றில் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊளைச்சதை அகல உதவும் புதிய திட்டம்

பூலாவ் சிராங்கூன் என்றும் குறிப்பிடப்படும் கோனி தீவு.

சிங்கப்பூரின் ஒரே சொத்தான அதன் மக்கள், உழைப்புக்கு ஏற்றவர்களாக, காலத்துக்குத் தோதானவர்களாக, தொழில்நுட்பம் சாரந்தவர்களாக, நோய்நொடி இல்லாதவர்களாக, புத்தாக்கமிக்கவர்களாக, எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் மாற்றங்களுக்கு ஏற்ப உடனே மாறிக்கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே இலக்கு. இந்த இலக்கு நிறைவேற வேண்டுமானால் சிறு வயதிலிருந்தே இவற்றுக்கான உடலுறுதியும் மனஉறுதியும் மக்களிடையே நிலைப்பட வேண்டியது அவசியம்.

ஓராண்டு நிறைவு – முன்னோக்கியப் பார்வை!

திரு லீ குவான் இயூவின் சாதனைகளை விளக்கும் பதாகைகளை நாடாளுமன்றக் கட்டத்தின் அருகே நிறுவும் ஊழியர்கள். 

சரித்திர நாயகர்கள், போற்றலுக்கும் ஆய்வுக்கும் உட்படும்போது, அது பெரும்பாலும் அவர்களுடைய இறந்தகால வரலாற்றை நோக்கிய மீள்வலியுறுத்தலாகவே அமைகின்றது. ஆனால், இதிலும் சிங்கப்பூரின் சரித்திர நாயகனும் இந்நாட்டுத் தோற்றுவாயின் முக்கிய காரணகர்த்தாவுமாகிய சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ மாறுபடுகிறார்.

Pages