வாழ்வில் பிடிப்பின்மை: முதியோரிடம் அதிகரிக்கும் போக்கு

உல­கெங்­கும் அண்­மைக்­கா­ல­மாக முதி­யோ­ரி­டையே வாழ்க்­கை­யில் பிடித்­த­மின்மை அல்­லது வெறுமை உணர்வு அதி­க­ரித்­து­வ­ரு­வ­தாக ஆய்­வுகள் கூறு­கின்­றன. அதா­வது தங்­கள் வாழ்க்கை விரை­வில் முடி­வ­டை­வதை இவர்­கள் தீவி­ர­மாக விரும்­பு­கி­றார்­கள்.

இவர்­களில் எவரும் ஆட்­கொல்லி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அல்­லர். மன­ந­லம் பாதிக்­கப்­பட்­டோ­ரும் அல்­லர். அதே­வே­ளை­யில் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் எண்­ண­மும் இவர்களுக்கு இல்லை. ஆனால் மர­ணத்தை வர­வேற்க இவர்­கள் காத்­தி­ருப்­ப­தாக ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

மேலை நாடு­கள் பல­வற்­றி­லும் இத்­த­கைய முதி­யோர்­கள் இருக்­கி­றார்­கள். விளிம்­பு­நி­லை­யில் இருக்­கும் இவர்­கள், நக­ரும் கப்­ப­லில் தன்­னைச் சுற்­றி­லும் அனை­வ­ருக்­கும் ஏதோ ஒரு வேலை இருப்­ப­து­போ­ல­வும் தான் மட்­டும் அக்­கப்­ப­லில் ஏற்­றப்­பட்ட சரக்­குப் ­பொ­ரு­ளைப்­போல உணர்வதாக வும் கூறு­கின்­ற­னர்.

வாழ்க்­கை­யில் பிடித்­த­மின்மை என்­பது விரக்தி­யி­லி­ருந்து மாறு­பட்­டது. விரக்­தி­யால் வெறுப்பு தோன்­றும். ஆனால் பிடித்­த­மின்மை அல்­லது வெறுமை என்­பது வாழ்க்­கையை வெறுப்­ப­தால் ஏற்­படும் உணர்வு அன்று.

நெஞ்­சுக்கு நெருக்­க­மான உற­வின் மறை­வாலோ ஏதோ ஓர் இழப்­பாலோ ஏமாற்­றத்­தாலோ தோல்வி­யாலோ தாங்க இய­லாத வலி­யாலோ ஏற்­படும் துக்­க­மும் அன்று.

இனி இவ்­வு­ல­கில் இருந்து ஆகப் போவது ஒன்­று­மில்லை என்று கரு­து­வ­தால் ஏற்­படும் ‘வாழ்ந்­தது போதும்’ என்ற அயர்வு இது.

வாழ்­வின் ஏதா­வது ஒரு கட்­டத்­தில் விரக்தி ஏற்­ப­டு­வ­தும் அத­னால் ஒரு­வர் வெறு­மை­யாக உணர்­வ­தும் இயல்பே என்­றா­லும் குறிப்­பி­டத்­தக்க கார­ணம் ஏது­மின்றி இனி வாழ்­வ­தற்­கும் உயிர்­நீப்­ப­தற்­கும் தன்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் வித்தியா­சம் இல்லை என்று ஒரு­வர் நினைப்­பதை இயல்பு என்று நாம் கடந்­து­விட முடி­யாது.

இது வேறேதோ நாட்­டில் நடப்­பது என்று நாம் அலட்­சி­ய­மாக இருந்­து­விட முடி­யாது. சிங்­கப்­பூரின் மக்­கள்­தொகை விரை­வில் மூப்­ப­டைந்து வரு­வதை நாம் அறி­வோம். ஆக வாழ்க்­கை­யில் பிடித்­த­மில்­லாத முதி­யோர்­கள் குறித்த சிந்தனையும் அதற்­கான தீர்­வு­க­ளைக் காண்­ப­தும் நமக்கு முக்­கி­ய­மா­கிறது.

முதி­ய­வர் என்­றால் வேலை­பார்க்­கும் வய­தைக் கடந்­தி­ருப்­பார். காலை­யில் அரக்­கப்­ப­ரக்க எழுந்து, ஓடி ஓடி வேலை செய்த நாள்­கள் இனி இல்லை. காலை எழுந்த சிறிது நேரத்­தி­லேயே நாள் முழுக்க செய்­வ­தற்கு ஒன்­றுமே இல்லை என்ற அயர்வு அவ­ருக்கு ஏற்­படும்.

ஒருநாளில் அவ­ர­வர் வய­துக்­கேற்ப மனி­தர்­கள் உண­வில் சேர்த்­துக்­கொள்ள வேண்­டிய ஊட்­டச்­சத்­து­க­ளின் அளவை வல்­லு­நர்­கள் கணக்­கிட்­டுள்­ள­னர். எடுத்­துக்­காட்­டாக, உடல் ஆற்­ற­லுக்கு எந்தெந்த வய­தி­னர் எவ்­வ­ளவு கால்­சி­யம் சத்தை ஒருநாளில் உட்­கொள்ள வேண்­டும் என்ற மதிப்பீடு உள்­ளது.

இதைப்­போல் மன ஆற்­ற­லுக்­கும் உணர்வு ரீதி­யான ஆற்­ற­லுக்­கும் ஒரு­வர் ஒருநாளில் என்னென்ன செய்ய வேண்­டும் என்று யாரா­லும் கணக்­கிட முடி­யாது.

உட­லுக்கு அன்­றா­டம் போதிய அள­வில் ஊட்டச்­சத்து கிடைத்­தா­லும் மனத்­திற்­குத் தேவையான புத்­து­ணர்வு கிடைக்­காத நிலை­யில் ஏற்­ப­டு­வ­து­தான் வெறுமை உணர்வு.

தான் வாழும் வாழ்க்கை அர்த்­த­மற்­றது, நோக்க­மில்­லா­தது என்ற எண்­ணம் தோன்­றும்­போது ஒரு­வ­ருக்கு வாழ்க்­கை­யில் பிடித்­த­மின்மை ஏற்­ப­டு­கிறது.

அர்த்­த­மற்ற வாழ்க்கை என்­றா­கும்­போது ஊக்கம் தொலைந்­து­வி­டு­கிறது. அது, வாழ­வேண்டும் என்ற வேட்­கை­யைச் சிறிது சிறி­தாக மங்­கச் செய்­கிறது.

விழிப்­பு­ணர்வு, கற்­பனை ஆற்­றல், படைப்­பாற்­றல் போன்­ற­வை­யெல்­லாம் அவ­ரி­ட­மி­ருந்து விடை­பெற்று வில­கி­வி­டு­கின்­றன. எந்த ஒன்­றை­யும் செய்­வ­தாலோ, அடை­வ­தாலோ ஏற்­ப­டக்­கூ­டிய உற்­சா­கம் மறைந்­து­வி­டு­கிறது.

வெறு­மையே தொடர்­கிறது. எதி­லும் ஆர்­வ­மின்மை. வாழ்க்கை வறண்­டு­விட்­ட­தான உணர்வு. கடி­கா­ரம் மெது­வா­கச் செல்­கி­றதோ என்ற சலிப்பு. ‘முடி­யாப் பகலே, விடியா இரவே’ என்று நாள்­களைக் கடத்­தும் நிலை­யில் ‘மணி என்­ன­வாக இருந்­தால்­தான் என்ன’ என்ற விரக்தி.

இத்­த­கைய நிலைக்கு இவர்­களை இட்­டுச்­சென்­றது எது என்று ஆராய்ந்­தால், தனிமை, புறக்­க­ணிப்பு, ஒரு காலத்­தில் விற்­பன்­னர்­க­ளாக இருந்த அதே துறை­யில் இனி தனக்­கென அடையா­ளம் இல்லை என்ற உணர்வு, நீண்­ட­நாள் வாழ்ந்­தால் அன்­றா­டக் கட­மை­க­ளுக்­குக்­கூட யாரை­யே­னும் சார்ந்து வாழும் நிலை ஏற்­பட்­டு­

வி­டுமோ என்ற அச்­சம் எனப் பல உணர்­வு­க­ளின் கல­வை­யா­கத்­தான் வாழ்க்­கை­யில் பிடித்­த­மின்மை ஏற்­ப­டு­கிறது.

இந்த உணர்­வு­க­ளுக்­குத் தீர்­வு­காண முடிந்­தால் முதி­யோ­ரின் வெறுமை உணர்­வைப் போக்கி அவர்­களும் துடிப்­பு­மிக்க நம் சமு­தா­யத்­தில் இணைந்து பங்­காற்றி பொரு­ளுள்ள வாழ்க்கையை வாழ உத­வ­மு­டி­யும்.

நம்­மைச் சுற்­றி­யுள்ள முதி­ய­வர் யாரே­னும் வெறுமை உணர்­வால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் அவ­ரின் தனி­மை­யைப் போக்க முய­ல­லாம்.

அவ­ரது அனு­ப­வங்­கள் முக்­கி­யத்­து­வம் பெறுகின்­றன என்று உண­ர­வைக்­கும் வகை­யில், காது­கொ­டுத்­துக் கேட்­ப­தும் அவ­ரோடு நேரம் செல­வி­டு­வ­தும் முதி­ய­வ­ரின் மனப்­போக்­கில் மாற்றம் ஏற்­ப­டுத்­தக்­கூ­டும்.

தொண்­டூ­ழிய அடிப்­ப­டை­யில் அறி­மு­க­மற்ற முதி­ய­வர்­க­ளின் துய­ரைப் போக்க இளை­யர்­களும் பெரி­ய­வர்­களும் நேரம் ஒதுக்­க­லாம்.

அறி­வி­ய­லும் மருத்­து­வ­மும் இன்று மனி­தர்­களின் வாழ்­நாளை நீட்­டிக்­கும் வகை­க­ளைக் கண்­ட­றிந்து வெற்­றி­க­ர­மா­கச் சாதித்­துள்­ளன.

ஆனால் வாழ்க்­கைத் தரத்தை உயர்­நி­லை­யில் வைத்­தி­ருப்­பது என்­பது மனி­தர்­க­ளின் மனம் தொடர்­பா­னது.

சுற்­றி­யி­ருப்­போர் கைகொ­டுத்­தால் மட்­டும் போதாது. முதி­யோ­ரும் முழு­ம­ன­தா­கச் சில முயற்சி­களை மேற்­கொள்ள வேண்­டும்.

தேவையற்ற சிந்­த­னை­கள் எனும் சிலந்தி வலை­கள் மூளையை முடக்­கி­வி­டா­மல் பாது­காக்க வேண்­டும். ‘நமக்­கும் கீழே உள்­ள­வர் கோடி’ என்­பதை நினைத்­துப் பார்த்து ஆக்­க­க­ர­மான சிந்­த­னை­க­ளுக்கு மட்­டுமே சிந்­தை­யில் இடம்­தர வேண்­டும்.

இது­வரை வாழ்ந்த வாழ்க்கை போர்க்­க­ளமோ, பூக்­க­ளமோ அதில் பெற்ற தனிப்­பட்ட அனு­ப­வங்­களை, அந்த அனு­ப­வங்­க­ளால் தாங்­கள் கற்ற பாடங்­களை தொடர்ந்து இயங்­கிக்­கொண்­டி­ருக்­கும் இந்த உல­கிற்கு வாழும்­வரை வழங்­கு­வேன் என்று உறு­தி­பூண்டு செயல்­பட வேண்­டும்.

உற்­சா­கத்தை மீட்­டெ­டுக்­கக்­கூ­டிய அம்­சங்­களை அடை­யா­ளம்­கண்டு மீள்­தி­ற­னைப் பெருக்­கிக்­கொள்ள வேண்­டும். மன­மி­ருந்­தால் இதற்கு மார்க்­கம் இல்­லாது போகாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!