You are here

சிங்க‌ப்பூர்

சவால்களை வெற்றிப் படிகளாக மாற்றி ஆசிரியரான நந்தா

திரு நந்தா மீனாட்சி சுந்தரம்.

முஹம்மது ஃபைரோஸ்

விடாமுயற்சி, மனஉறுதி, மீள் திறன். இவையே திரு நந்தா மீனாட்சி சுந்தரம் ஒரு கல்வியாளராகக் கடந்து வந்த பாதையை எடுத்துக் காட்டும் சொற்கள். யீ‌ஷூன் டவுன் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான இவர், நேற்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக உள்ளரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் பட்டமளிப்பு விழா வில் இரு விருதுகளைத் தட்டிச் சென்றார். தேசிய கல்விக் கழகத்தின் தங்கப் பதக்கம், கணிதச் சங்கப் புத்தகப் பரிசு ஆகியவை அவை. வகுப்பில் ஒட்டுமொத்த தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்ததற் காக இவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றிய நபருக்கு சிறை

காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றிய நபருக்கு சிறை

போலி விபத்துகளை ஏற்படுத்தி காப்புறுதி நிறுவனங்களை ஏமாற் றிய மோசடி நபருக்கு நேற்று 44 வாரச் சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது. காப்புறுதி நிறுவனங்களிட மிருந்து 104,700 வெள்ளி காப் புறுதி தொகையை பெறுவதற்காக மோசடி கும்பல், போலியான சாலை விபத்துகளை ஏற்படுத்திய தாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கும்பலைச் சேர்ந்த மலேசியரான டிவ் யீ ஜெங்குக்கு நேற்று 44 வாரச் சிறைத் தண் டனையும் 5 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் காப்புறுதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக சதி செய்த மூன்று குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார்.

ஒரே கட்டடத்தில் பல வழிபாட்டுத் தலங்கள்

ஒரே கட்டடத்தில் முதல் முறையாக பல சீனக் கோயில்களும் பல தேவாலயக் குழுக்களும் செயல்படும் திட்டத்துக்கு தேசிய வளர்ச்சி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளித ழிடம் நேற்று பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சு, நில விற்ப னைத் திட்டம் மூலம் அரசாங்கம் வழங்கும் நிலங்கள் தங்கள் தேவைகளுக்குப் பெரியதாக இருக்கிறது என்று கருதும் சிறிய சமயக் குழுக்கள், இந்த பல மாடிக் கட்டடம் தங்கள் வழிபாடு களையும் பிரார்த்தனைக் கூட் டங்களையும் மேற்கொள்வதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தது.

அரசு ஆணைபெற்ற இரு புதிய கழகங்கள்

ஊழி­யர் திறன் மேம்பாடு, வேலை­வாய்ப்பு போன்ற­வற்­றில் தேசிய அள­வில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் ‘ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர் (எஸ்­எஸ்ஜி), ஊழி­யர்­அணி சிங்கப்­பூர் (டபிள்­யூ­எஸ்ஜி) என அர­சாங்க ஆணை­பெற்ற இரண்டு கழ­கங்கள் அறி­மு­கப்­படுத்­தப்­படு­கின்றன. ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர் எனப்­படும் எதிர்­கா­லத் திறன் வளர்ச்­சித் திட்­டத்திற்­கான கழ­கம் கல்வி அமைச்­சின் கண்­ கா­ணிப்­பி­லும் ‘டபிள்­யூ­எஸ்ஜி’ எனப்­படும் ‘ஊழி­யர் அணி சிங்கப்­பூர்’ எனும் கழ­கம் மனித வள அமைச்­சின் கண்­கா­ணிப்­பி­லும் செயல்­படும்.

கடந்த வாரத்தில் 554 பேருக்கு டெங்கி பாதிப்பு

டெங்கி விழிப்புணர்வுப் பதாகை.

கடந்த வாரம் ஜன­வரி 3 - 9ஆம் தேதி வரை டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை புதிய உச்­ச­மான 554ஐ தொட்­டுள்­ளது. இதனை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தனது இணை­யப் பக்கத்தில் வெளி­யிட்­டுள்­ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 முதல் ஜன­வரி 2ஆம் தேதி வரை ஆக அதி­க­மாக 448 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இந்த ஆண்டு ஜன­வரி 10ஆம் தேதி 50 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதற்கு மறுநாளான திங்கட்­ கி­ழமை பிற்­ப­கல் 3.30 மணிக்கு 71 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்த­தா­க­வும் வாரி­யம் தெரி­வித்­தது.

வசதி குறைந்த மாணவர்களுக்காக நிதி திரட்டிய மலையாளிகள் சங்கம்

சிங்கப்­பூ­ரின் SG50 கொண்டாட் டங்களை ஒட்டி கடந்த ஆண்டு சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் வசதி குறைந்த மாண­வர்­களின் உயர்­கல்­விக்கு உத­வு­வதற்­காக $500,000 நிதி திரட்­டி­யி­ருந்தது. அந்த நிதி சிங்கப்­பூர் மலையாளி நிதி உதவி­யாக ஒதுக்­கப்­பட்டு, தேசியப் பல்­கலைக் கழகம் அதைத் தகு­தி­யுள்ள மாண­வர்­களுக்கு வழங்­கும். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்­பூர் அல்லது நிரந்த­ர­வா­சி­கள் இந்த நிதி உதவிக்­குத் தகுதி பெறலாம். எனினும் இந்திய மாண­வர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும்.

மருத்துவம் தொடர்பான வழக்குகளில் புதிய திட்டங்கள்

மருத்­து­வச் செல­வு­கள், அதன் தொடர்­பிலான உயர்ந்த காப்­பு­று­திச் செல­வு­களைத் தவிர்க்­கும் வகையில் மருத்­து­வம் தொடர்­பான வழக்­கு­களில் புதிய திட்­டங்களை தலைமை நீதிபதி சுந்த­ரேஷ் மேனன் நேற்று அறி­வித்­தார். 2016 சட்ட ஆண்டை நேற்றுக் காலை தொடங்கி வைத்து உரை யாற்றிய திரு சுந்த­ரேஷ், தற்போது உள்ள நடை­முறை­களுக்கு மாற்றாக மூன்று புதிய நடை­முறை­கள் பற்றி பேசினார்.

கௌரவ மூத்த வழக்கறிஞர் நியமனம்

சிங்கப்­பூ­ரின் இரண்டா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சட்டப் பேரா­சி­ரி­யர் இங் லோய் வீ லூன் நேற்று நிய­ம­னம் செய்­யப்­பட்­டார். சட்டத் துறையில் அவரது சிறப்பு அறிவுத்திற­னுக்­கும் சட்டத் துறை, சட்ட நிபு­ணத்­து­வம் ஆகி­ய­வற்­றின் மேம்பாட்­டிற்­காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்­கீ­க­ரிக்­கும் நோக்கில் இந்தப் பதவி வழங்­கப்பட்டிருப்­ப­தாக சிங்கப்­பூர் சட்டப் பயி­ல­கம் தனது ஊடகச் செய்­தி­யில் குறிப்­பிட்­டது. முத­லா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக திரு இயோ டியோங் மின் 2012ஆம் ஆண்டில் நிய­ம­னம் செய்­யப் ­பட்­டார்.

83.8% மாணவர்கள் குறைந்தது ஐந்து பாடங்களில் தேர்ச்சி

தினேஷ் பழனி

சுதாஸகி ராமன்

குடும்பச் சூழ்நிலை எந்த வகையிலும் தனது கல்வியைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்ட உட்லண்ட்ஸ் உயர் நிலைப் பள்ளி மாணவர் ம. தினேஷ் பழனி, கடந்த ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் (‘ஜிசிஇ’) சாதாரண நிலைத் (‘ஓ’) தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்று ஒற் றைப் பெற்றாரான தனது தாயாருக்கும் தாத்தாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

11வது மாடியிலிருந்து பொருட்கள் வீச்சு; ஆடவர் கைது

பூன் கெங் ரோட்டில் உள்ள புளோக் 16இன் 11வது மாடியிலிருந்து நேற்றுக் காலை ஏழு மணியளவில் 60 வயதான ஆடவர் சமையல் பாத்திரங்கள், பூந்தொட்டிகள், பொருட் களைக் கொண்டு செல்ல உதவும் ‘டிராலி’ போன்ற கனமான பொருட்களைக் கீழே வீசியதில் மூன்று கார்கள் சேதமுற்றன. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. காலை 8.45 மணியளவில் போலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அவர் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. படங்கள்: வான்பாவ்

Pages