லிட்டில் இந்தியாவில் மீண்டும் திறக்கப்படும் சரவண பவன்

கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் சந்தித்த வர்த்தகச் சிக்கல்களால் மூடப்பட்ட பிரபல உணவகமான சரவண பவன், மூவாண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 23ஆம் தேதியன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டுவரை ஆறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த அந்த உணவகம் தற்போது லிட்டில் இந்தியாவில் உள்ள ‘சென்ட்ரியம் ஸ்குவேர்’ முதல் தளத்தில் மீண்டும் திறக்கப்படுகிறது.

பெருந்தொற்றுக் காலக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும், மனிதவளப் பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்பட்டு அந்த உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாகச் சொல்கிறார் அவ்வுணவகத்தை நடத்த உரிமம் பெற்றுள்ள ஒருவரான கோல்கத்தாவைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான அ‌ஷோக் சௌத்ரி.

“சரவண பவன் அனைத்துலக அளவில் பிரபலமான தென்னிந்திய உணவகம். அத்துடன், தற்போது மனிதவளச் சிக்கல்கள் தளர்ந்துள்ளதாலும், நல்ல சைவ உணவகத்தை நாடும் மக்கள் அதிகரித்திருப்பதாலும் இவ்வுணவகத்தை மீண்டும் திறக்க இதுவே சிறந்த நேரம்,” என்றார் திரு அ‌ஷோக்.

பசுமையான, நவீன உட்புற வடிவமைப்பு, உயரமான உட்கூரையுடன் நூறு இருக்கைகளுடனும், உணவு வாங்கிச் செல்பவர்களுக்கென தனி சமையலறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளன. சமண, இந்தோ - சீன வகை, ஐஸ்கிரீம், ஸ்மூதி எனும் மிருதுவாக்கப்பட்ட பானங்கள் உட்பட 550க்கும் மேற்பட்ட உணவுவகைகள் அவர்களது உணவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகத் திரு அ‌ஷோக் குறிப்பிட்டார்.

உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள், பெருநிறுவன வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் மூன்று நேர உணவு வழங்கும் வகையில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை உணவகம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தலப்பாகட்டு பிரியாணி எனும் பிரபல உணவகத்தை ஆறு ஆண்டுகளாக நடத்தி வருபவரும், தளவாட, விநியோகத் தொடர் மேலாண்மையில் அனுபவம் பெற்றவருமான திரு அ‌ஷோக், “இந்த உணவகத்தில் பாரம்பரிய தென்னிந்திய சமையல் செய்வதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து சமையல் கலைஞர்களும் நிர்வாகம் உள்ளிட்ட பிற பணிகளுக்காக 15 பேரும் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.

நிதி நெருக்கடியாலும் நடைமுறை‌ச் சிக்கல்களாலும் மூடப்பட்ட சரவண பவன் உணவகம் புதிய இலக்குகளுடன் மீண்டும் செயல்பாட்டைத் தொடங்கவுள்ளது. படம்: தப்லா

மேலும், “லிட்டில் இந்தியாவில் சைவ உணவுக் கடைகள் பல இயங்குவதால், போட்டி அதிகம். அதனால் புதுமையான உணவு வகைகளை அறிமுகம் செய்வதோடு, செயற்கை நிறம், சுவையூட்டிகள் பயன்பாட்டைத் தவிர்த்து, சிறந்த உணவைத் தர உழைப்போம்,” என்கிறார் அவர்.

கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கி உலகெங்கிலும் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் சரவண பவன் உணவகத்தின் கிளையை தற்போது சிங்கப்பூரில் மீண்டும் திறக்கும் திரு அ‌ஷோக்கும் அவருடைய குழுவினரும், எதிர்காலத்தில் இன்னும் பல கிளைகளையும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் திறக்க எண்ணம் கொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!