You are here

சிங்க‌ப்பூர்

மாரடைப்பு; மெதுவோட்டக்காரர் கீழே விழுந்து மரணம்

சிங்கப்பூர் ஐலண்ட் கண்ட்ரி கிளப்புக்கு அருகே மெக்ரிட்சி இயற்கை வளப் பாதையில் 50க்கும் அதிக வயதுள்ள மெதுவோட்டக் காரர் ஒருவர் விழுந்து கிடந்தார். அவருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டதாகவும் அவர் பின்னர் மருத்துவமனையில் மாண்டுவிட்ட தகாவும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளுக்குத் தெரிய வந் தது. இதன் தொடர்பில் தனக்கு சனிக்கிழமை முற்பகல் சுமார் 11.05 மணிக்குத் தகவல் வந்த தாகவும் தான் உடனே மருத்துவ வண்டியையும் தீயணைப்பு வாக னத்தையும் அங்கு அனுப்பியதாக வும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மூட்டைப்பூச்சி புகார் பற்றி ஸ்கூட் விசாரணை

மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட் நிறுவனத்தின் விமானம் ஒன்றில் தான் பயணம் செய்த போது தன்னை மூட்டைப்பூச்சி கடித்துவிட்டதாக பயணி ஒருவர் புகார் தெரிவித்தார். இது பற்றி அந்த விமான நிறு வனம் புலன்விசாரணை நடத்தி வருகிறது. ஸ்கூட் விமானத்தில் தான் சிங்கப்பூரிலிருந்து ஹாங்காங் சென்று பிறகு அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பியதாகவும் பயணத்தின்போது விமானத்தில் மூட்டைப்பூச்சிகள் தன்னை கைகளிலும் முதுகிலும் கடித்துவிட்டதாகவும் ஜியாமின் ஹான் என்ற பெண்மணி சனிக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

வெளிநாட்டு ஊழியர் மையம் கோரிக்கை

வெளிநாட்டு ஊழியர் மையம் ஒரு முதலாளி தன்னுடைய பங்ளாதேஷ் ஊழியர்கள் 20 பேருக்கு சம்பளம் சரிவரக் கொடுக்கவில்லை என் பதையும் அந்த ஊழியர்களைப் பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளத் தக்க இடத்தில் தங்கவைக்கத் தவறிவிட்டது என்பதையும் கண்டு பிடித்திருக்கிறது. அந்த முதலாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளை அந்த மையம் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது. அந்த முதலாளி யார் என்பதை அந்த அமைப்பு தெரிவிக்க வில்லை. இருந்தாலும் அவர் எஸ்ஜேஎச் டிரேடிங் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஷாஜஹான் என்று நம்பப்படுகிறது.

சுமத்ராவில் நிலநடுக்கம் சிங்கப்பூரில் அதிர்வுகள்

இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ரா தீவிற்கு அருகே நேற்று காலை சிங்கப்பூர் நேரப்படி 11.08 மணி அளவில் 6.5 ரிக்டர் நிலநடுக்கம் நிகழ்ந்தது. அதனுடைய விளைவுகள் சிங்கப் பூரில் உணரப்பட்டன. இங்கு கட்டடங்களில் அதிர்வு களைத் தாங்கள் உணர்ந்ததாக பலரும் டுவிட்டரில் தெரிவித்தனர். நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என்றும் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு ஓடியதாகவும் செய்திகள் தெரிவித்தன. கடலில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்த அந்த நிலநடுக்கம் காரணமாக உயிருடற்சேதம் ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை.

செந்தோசா ஸ்கை டவரில் கோளாறு: சேவை நிறுத்தம்

செந்தோசாவின் டைகர் ஸ்கை டவர் கோபுரத்தில் சனிக்கிழமை 39 பேர் 4 மணி நேரம் மாட்டிக் கொண்டார்கள். இதனையடுத்து, அங்கு சேவை நிறுத்தப்பட்டது. சிக்கிச்கொண்டவர்களில் நான்கு குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் பூமியிலிருந்து 25 மீ. உயரத்தில் 4 மணி நேரம் காத் திருக்க வேண்டியிருந்தது. பிறகு அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கினர். செந்தோசாவில் இருக்கும் டைகர் ஸ்கை டவர் கோபுரத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதே இதற்கான காரணம். சனிக்கிழமை பிற்பகல் நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

ஓய்வுகாலத் திட்டம் பற்றி அதிகமானோர் அக்கறை

படம்: திமத்தி டேவிட்

ஓய்வு வயதான 55 வயதை அடைந்ததும் தங்கள் மத்திய சேம நிதிக் கணக்கின் சேமிப்புத் தொகையிலிருந்து எவ்வளவு பணத்தை மீட்டுக்கொள்ள முடி யும்; அவ்வாறு அந்த வயதில் மீட்டுக் கொள்ளவில்லை என்றால் கணக்கில் உள்ள தொகைக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்; ‘சிபிஎஃப் லைஃப்’ திட்டத்தில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் போன்றவை மத்திய சேம நிதி உறுப்பினர்கள் பலரது அக்கறைக்குரிய கேள்விகளாக இருக்கின்றன.

உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளது - பிரதமர்

பொருளியலை மேம்படுத்துவதற்கு நாம் காட்டிய கடின உழைப்பு நல்ல பலன்களைத் தந்திருக்கிறது. அத னால் சிங்கப்பூரர்கள் இவ்வாண்டு தேசிய தினத்தை அதிக மகிழ்ச்சி யுடன் கொண்டாட முடிந்துள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். தெக் கீ தொகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்சியில் பேசிய திரு லீ, “இவ்வாண்டு பொருளியல் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 2.5% வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சம் பளங்களை உயர்த்தியுள்ளது, சிங்கப்பூரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள் ளது,” என்றும் கூறினார். “உற்பத்தித்திறனும் அதிகரித் திருப்பது உற்சாகமளிக்கிறது.

பொதுமக்களுக்கு தொல்லை: எம். ரவி மீது மூன்று குற்றச்சாட்டுகள்

பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்த மூன்று சம்பவங்களின் தொடர்பில் வழக்கறிஞர் எம். ரவி மீது நேற்று குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அந்த மூன்று சம்பவங் கள் ஜூலை 31ஆம் தேதி, இம்மா தம் 8ஆம் தேதி, 11ஆம் தேதி ஆகிய நாட்களில் நடந்தன. கடந்த மாதம் 31ஆம் தேதியன் றும் இம்மாதம் 11ஆம் தேதியன்றும் சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்கு வந்த மக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். இம்மாதம் 8ஆம் தேதியன்று, சக வழக்கறிஞர் ஜேனட் சோங் அருள்தாஸுக்கு அவரது அலுவலகம் உள்ள தி எடல்ஃபி கட்ட டத்துக்கு வெளியே தாக்கி காயம் விளைத்தார்.

பயணிகளுக்கு உதவும் புதிய நூதனச் செயலி

 ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் இந்த ‘ரெடி டு டிராவல்’ செயலி

சாங்கி விமான நிலையத்தின் மிகப்பெரிய தரைவழிச் சேவை நிறுவனம் ‘ரெடி டு டிராவல்’ என்ற புதிய பயணச் செயலியை அறி முகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய செயலி மூலம் பயணிகள் சுற்றுலாத் தளங்கள், பயண முகவர்கள் அளிக்கும் பய ணச் சலுகைகள், விமானப் போக்குவரத்து அட்டவணை மட்டு மின்றி பல பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள முடியும். ‘சேட்ஸ்’ நிறுவனத்தின் இந்த ‘ரெடி டு டிராவல்’ செயலி மூலம் வெளிநாடுகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், வெளியுறவு அமைச்சுடன் தங்கள் விவரங்களை இனைய முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

உட்லண்ட்ஸில் பௌத்த மடாலயம் திறப்பு

படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரின் வடக்குவாழ் மக்க ளுக்கு சேவையாற்றும் பௌத்த மடாலயம் ஒன்று நேற்று அதி காரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஒரு காற்பந்துத் திடலைவிடச் சற்று சிறிய அளவில் அமைந் துள்ள பி.டபிள்யூ. மடாலயத் தில் மொத்தம் 1,200 பேர் ஒரே சமயத்தில் பிரார்த்தனை மேற் கொள்ளலாம். பிரதான வழி பாட்டு மண்டபத்தைத் தவிர, 400 பேர் அமரக்கூடிய பலபயன் மண்டபம், ஒரு நூலகம், வகுப்ப றைகள், ஓர் அரும்பொருளகம் ஆகியவை அந்த மடாலயத்தில் உள்ளன. உட்லண்ட்ஸ் டிரைவ் 16ல் உள்ள இந்த ஆலயம் தீவெங்கும் உள்ள ஐந்து பௌத்த நிலையங் களுக்குத் தலைமையகமாக விளங்கும். அதற்கு 3,500 உறுப்பினர்கள் உள்ளனர்.

Pages