You are here

உல‌க‌ம்

பர்கினா ஃபாசோ உணவக தாக்குதலில் 20 பேர் பலி

படம்: ராய்ட்டர்ஸ்

ஒளகடோவுகோவ்: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவில் உள்ள ஓர் உணவகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியானதாகவும் 8 பேர் காயம் அடைந்ததாகவும் அரசாங் கம் தெரிவித்துள்ளது. பர்கினோ ஃபாசோவின் தலைநகரான ஒளகடோவுகோவில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளி யில் அமர்ந்திருந்த வாடிக்கை யாளர்களை நோக்கி ஞாயிற்றுக் கிழமை மூன்று துப்பாக்கிக்காரர் கள் கண்மூடித்தனமாக சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய துப்பாக்கிக்காரர்கள், அந்த உணவகத்தில் இருந்தவர் களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியதாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜோகூர் இளவரசிக்கு கோலாகல திருமணம்

மணப்பெண்ணான ஜோகூர் இளவரசிக்கு திரு டெனிஸ் முகம்மட் மோதிரம் அணிவிக்கிறார். படம்: ஏஎஃப்பி

ஜோகூர்பாரு: ஜோகூர் சுல்தானின் மகள் இளவரசி துங்கு துன் அமினா மைமுனா இஸ்கண்டரியாவுக் கும் டச்சுக்காரரான டெனிஸ் முகம்மட் அப்துல்லாவுக்கும் நேற்று திருமணம் சிறப்பாக நடந்தது. அரச குடும்பத்தின் அதிகாரத் துவ இல்லமான இஸ்தானா புக்கிட் செரினில் அவர்களின் திருமணம் மலாய் பாரம்பரிய முறைப்படி நடந்தது. மலாய் பாரம்பரிய உடை அணிந்திருந்த திரு டெனிஸ் முகம்மட், ஜோகூர் முஃப்தி முகம்மட் தாரிர் ஷம்சுதின் முன்னிலையில் இளவரசி துங்கு அமினாவுடனான திருமணத்தை உறுதி செய்தார். இந்தத் திருமண வைபவத்தில் ஜோகூர் சுல்தான் இப்ராஹிம், இளவரசியின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மலேசியா: கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

கோலாலம்பூர்: மலேசியாவில் எதிர்க்கட்சி சென்ற ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கின்போது நடந்த வன்செயல்கள் தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறிய மலேசிய துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி, அதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். போலிசார் அது தொடர்பில் விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதற்குக் காரண மானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார். “நாட்டில் ஜனநாயகம் முறையாக நிலை நிறுத்தப்பட வேண்டும். நமக்கிடையே கருத்து வேறு பாடுகள் இருக்கலாம்.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ளக்கூடும்

வா‌ஷிங்டன்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை என்று அமெரிக்க உளவுத் துறை தலைவர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வார் என்ப தில் சந்தேகமே இல்லை என்றும் இதனால் மீண்டும் அத்தகைய சோதனை மேற்கொண்டாலும் அது தனக்கு வியப்பாக இருக்காது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவின் குவாம் தீவை தாக்கப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டலைத் தொடர்ந்து வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க இந்தோனீசியா கடும் நடவடிக்கை

ஜகார்த்தா: போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க இந்தோனீசிய அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் சந்தேக நபர்களுக்கு எதிராக பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே எடுத்து வரும் கடும் நடவடிக்கை போல் இந்தோனீசியாவிலும் எடுக்கப்படும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோவி விடோடோவும் தேசிய போலிஸ் படைத் தலைவரும் முன்னதாகக் கூறி வந்தனர். இந்நிலையில் போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கண்டதும் சுடுவதற்கு சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கடந்த ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டார்.

டாக்டர் மகாதீர் கூட்டத்தில் அமளி மூண்டதால் நிறுத்திவைப்பு

படம்: ஸ்டார் தொலைக்காட்சி காணொளி

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது கலந்துகொண்ட ‘நத்திங் டு ஹைட் 2.0’ கலந்துரையாடலின்போது ஏற்பட்ட அமளியால் அந்நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டது. நேற்று நடந்த அந்த கலந்துரையாடலில் திரு மகாதீர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது பங்கேற்பாளர்களில் ஒருவர், போத்தல் ஒன்றை மேடையை நோக்கி வீசினார். டாக்டர் மகாதீர் 1985 ‘மெமாலி’ சம்பவத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தபோது அது நடந்தது. அதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களில் சிலர் நாற்காலிகளையும் பொருட்களையும் தூக்கி வீசினர்.

மலேசியாவில் திடீர் சோதனை

படம்: நடிரா ரோட்ஸி

நெகிரி செம்பிலான் நிலாய் நகரில் தென்கிழக்காசிய விளை யாட்டுகளை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். படம்: நடிரா ரோட்ஸி

வெர்ஜினியா வன்முறை; டிரம்ப் மீது குறைகூறல்

படம்: ஏஎஃப்பி

வெள்ளை இன தேசியவாதி களின் ஊர்வலத்தில் நிகழ்ந்த வன்செயல் தொடர்பாக அமெ ரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்து குறைகூற லுக்கு ஆளாகி உள்ளது. அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலத்திலுள்ள சார்லாட்ஸ்வில் நகரில் நிகழ்ந்த ஊர்வலத்தின் போது வெள்ளை இன தேசிய வாதிகளும் அவர்களை எதிர்ப்ப வர்களும் மோதிக்கொண்டனர். அது வன்முறையாக மாறி ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்ட னர்.

அரச குடும்ப திருமணம்; ஜோகூர் பாரு சாலைகள் மூடல்

ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் பாருவில் இன்று நடக்கும் அரச குடும்ப திருமணத்திற்காக பல சாலைகள் மூடப்படுகின்றன. ஜாலான் ஆயர் மொலேக், ஜாலான் யாஹ்யா அவால், ஜாலான் டத்தோ ஒன் ஆகிய சாலைகள் பாதிக்கப்படும் என்று ஜோகூர் போலிஸ் தலைவர் வான் அஹ்மட் நஜ்முடீன் முகமது தெரிவித்தார். இன்று காலை ஏழு மணி முதல் திருமண நிகழ்வு முடியும் வரை சாலைகள் மூடப்பட்டிருக்கும். 318 போலிஸ் அதிகாரிகள் பாது காப்பில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

சுதந்திர நாளை முன்னிட்டு 4 நாட்கள் எழுச்சியூட்டும் சைக்கிள் பயணம்

மலேசியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு 60 சைக்கிளோட்டிகள் 230 கி.மீ. தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். ஆகஸ்ட் 31ஆம் தேதி துவங்கவிருக்கும் இப்பயணத்தில் இரண்டு சைக்கிள் குழுவைச் சேர்ந்த 30 முதல் 73 வயதுடைய ஆண்களும் பெண்களும் பங்கேற்கின்றனர். கோலா திரங்கானுவிலிருந்து பாஹாங்கின் குவாந்தான் அருகேயுள்ள பாலோக்கிற்கு அவர்கள் நான்கு நாள் பயணம் மேற்கொள்வர். பொழுதுபோக்காக சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கவும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்தவும் நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறவும் இந்த சைக்கிள் பயணம் உதவும் என்று ஏற்பாட்டாளர் சான் தெரிவித்தார்.

Pages