You are here

உல‌க‌ம்

பிரசல்ஸில் 6 பேர் கைது

பிரசல்முகமூடியணிந்த போலிசார், ஸ்சார்பீக் வட்டாரத்தில் பயங்கரவாத சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடுகின்றனர். படம்: ஏஎஃப்பி

பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடந்து வரும் வேளையில் சந்தேகப் பேர்வழிகள் 6 பேரை பெல்ஜியப் போலிசார் கைது செய்துள்ளனர். பிரசல்ஸ் நகரில் பல்வேறு இடங்களில் போலிசார் மேற் கொண்ட சோதனையின்போது அவர்கள் கைது செய் யப்பட்டனர். வியாழக்கிழமை பின்னேரம் ஸ்சார்பீக் வட்டாரத்திலும் திடீர் சோதனை மேற்கொண்ட போலிசார் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று சோதனை மேற் கொண்டனர்.

பீரங்கிக் குண்டு பயிற்சியை வடகொரியத் தலைவர் பார்வையிட்டார்

பீரங்கிக் குண்டு பயிற்சியை வடகொரியத் தலைவர் பார்வையிட்டார்

சோல்: உண்மையான பீரங்கிக் குண்டுகளைப் பயன்படுத்தி வடகொரிய ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பார்வையிட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின. தென்கொரிய அதிபரின் அதிகாரத்துவ இல்லத்தைக் குறிவைத்து தாக்குவது போன்ற பயிற்சி அது என்று கூறப் படுகிறது. வடகொரியாவைத் தாக்க எதிரிகள் விரும்பினால் சோல் நகரை முற்றாக அழிப்போம் என்று கிம் உறுதியளித்திருப் பதாகவும் உள்ளூர் ஊடகத் தகவல் தெரிவித்தது. அமெரிக் காவும் தென்கொரியாவும் சேர்ந்து பெரிய அளவில் கடற்படை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

95 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல்

அமெரிக்காவின் கனெஸ்டோகா  என்னும் இந்தக் கப்பல் கடைசியாக 1921ஆம் ஆண்டின் முற்பகுதியில் காணாமல் போனது. படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று சான்பிரான்சிஸ்கோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படை வரலாற்றில் நீடித்த மிகப் பெரிய ஒரு புதிர் முடிவுக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். 1921ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து ஹவாய் புறப்பட்ட அமெரிக்கக் கப்பல் பாதி வழியில் மாயமாய் மறைந்தது. அக்கப்பலில் அப்போது 56 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அக்கப்பலின் சிதைந்த பாகம் ஒன்று 2009ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

ராக்கெட் இயந்திரத்தை சோதனை செய்தது வடகொரியா

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன். (நடுவில்) படம்: ஏஎப்பி

சோல்: ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. அணுவாயுதத்தை ஏந்திச்செல்லும் ஆற்றல் மிக்க ஏவுகணைகளைச் சோதனை செய்துவரும் வடகொரியா தொடர்ந்து இத்தகைய மேலும் பல ஏவுகணைகளை அந்நாடு மேம்படுத்தக்கூடும் என்பதை தற்போதைய சோதனை உணர்த்துவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் ராக்கெட் இயந்திர சோதனையைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு தென்கொரிய அதிபர், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

ஐஎஸ் சந்தேக நபர்கள் 13 பேர் மலேசியாவில் கைது

படம்: ஏஎப்பி

கோலாலம்பூர்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருப் பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 13 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். புக்கிட் அமான் சிறப்புப்படை போலிசார் புதன்கிழமை மேற் கொண்ட அதிரடி சோதனை யின்போது அந்த 13 பேர் கைது செய்யப்பட்டதாக போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். அந்த அதிரடி சோதனையின் போது ஐஎஸ் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட தாகவும் திரு காலிட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார்.

மலேசியா: சட்டத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக நஜிப் மீது மகாதீர் வழக்கு

மலேசியா: சட்டத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக நஜிப் மீது மகாதீர் வழக்கு

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்ற இரு முன்னாள் அம்னோ உறுப்பினர்களுடன் சேர்ந்து வழக் குத் தொடுத்துள்ளார். அதில் திரு நஜிப் தமக்கு எதிரான பல்வேறு விசாரணைக ளில் தடை ஏற்படுத்த, அவற்றை திசை திருப்பி தடுக்கும் எண்ணத் துடனும் கெட்ட உள்நோக்கத்துட னும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதில் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மலேசியாவில் 1எம்டிபி எனப் படும் அரசு நிதியம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதமர் நஜிப் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். இதில் அவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் அமெரிக்க டாலர் 680மி.

மூன்றாவது சந்தேக நபர் பிடிபட்டார்

மூன்றாவது சந்தேக நபர் பிடிபட்டார்

பிரசல்ஸ்: பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்றா வது சந்தேக நபரான நஜிம் லாச்சருயி நேற்று பிடிபட்டதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக, தற்கொலைத் தாக் குதல்காரர்களாக இருவர் செயல் பட்டுள்ளனர் என்றும் அவர்கள் காலிட் எல் பாக்குரியி, இப்பிரகிம் எல் பாக்குரியி என்ற இரு சகோதரர்கள் என்றும் போலிசார் நம்புகின்றனர். இதைத் தொடர்ந்து பெல்ஜிய போலிசார் பிரசல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்புகளுக்கு சற்று முன்னர் இந்த இரு சகோதரர்களுடன் காணப்பட்ட சந்தேக நபரைத் தாங்கள் தற்பொழுது தீவிரமாகத் தேடி வருவதாகக் கூறியிருந்தனர்.

போராளிகள் உருவாகும் இடமாக மாறிய பெல்ஜியம்

போராளிகள் உருவாகும் இடமாக மாறிய பெல்ஜியம்

பிரசல்ஸ்: சாக்லெட்டுகள், பியர் குடிபானம் போன்றவற்றுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு அண்மைய காலங்களில் ஐரோப்பா வில் போராளிகளை உருவாக்கும் இடமாக மாறிவிட்டதாக கூறப்படு கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர் களைத் தேடிய போலிசார் பெல்ஜிய நாட்டின் புறநகர்ப் பகுதியான மொலன்பெக்கில் தங்கள் பார் வையை செலுத்தினர். பெல்ஜிய போலிசாரின் கூற்றுப் படி, இங்குதான் பாரிஸ் தாக்குதல்களுக்குத் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.

ஆஸி. பிரதமர்: சீனாவின் நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளைத் தரும்

ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல். படம்: ஏஎப்பி

சிட்னி: தென்சீனக் கடலில் சீனா வின் ராணுவ நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறி யுள்ளார். சீனாவின் அணுக்க வர்த்தக பங்காளித்துவ நாடாக இருந்தும் ஆஸ்திரேலியா இவ்வாறான ஒரு கண்டனத்தை வெளியிட்டுள்ள தாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறு கிறது. தென்சீனக் கடற்பகுதியில் பல நாடுகள் அங்குள்ள தீவுகளை சொந்தம் கொண்டாடும் நிலையில் சீனா அங்கு நிலமீட்பு நடவடிக்கை களில் ஈடுபட்டு வந்துள்ளது.

அமைச்சரவையில் ஆங் சான் சூச்சிக்கு இடம்

தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சி

யங்கூன்: மியன்மார் புதிய அமைச்சரவைப் பட்டியலில் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூச்சியின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தகவல் கள் கூறுகின்றன. மியன்மார் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டின் கியவ், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 18 அமைச்சர்களில் திருவாட்டி சூச்சியும் ஒருவராவார். யாருக்கு எந்த அமைச்சு என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப் பினும் திருவாட்டி சூச்சி, வெளியுறவு, எரிசக்தி, கல்வி அமைச்சுகளுக்கு பொறுப்பு ஏற்கக்கூடும் என்று கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் அவரைத் தவிர வேறு பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.

Pages