யூரோ 2024க்கு தகுதிபெறும் முனைப்புடன் நார்வே, இத்தாலி

நார்வேயின் முதல் கோலைக் கொண்டாடும் ஹாலண்ட். படம்: ராய்ட்டர்ஸ்

ஓஸ்லோ: யூரோ 2024 காற்பந்து தகுதிச்சுற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜார்ஜியா அணியை 2-1 எனும் கோல் கணக்கில் நார்வே வீழ்த்தியது.

நட்சத்திர ஆட்டக்காரரான எர்லிங் ஹாலண்ட் (படம்), நார்வேக்காக விளையாடியுள்ள 26 அனைத்துலக ஆட்டங்களில் 25வது கோலைப் போட்டார்.

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அவர் முதல் கோலைப் போட்டார். எட்டு நிமிடங்கள் கழித்து அணித் தலைவர் மார்டின் ஒடிகார்ட் கோல் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினார்.

ஆட்டம் முடிவடையும் தருணத்தில் ஜார்ஜியாவுக்காக புடு ஸிவ்ஸிவாட்ஸே ஒரு கோலைப் போட்டார்.

‘ஏ’ பிரிவில் ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள நார்வே மூன்றாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஸ்காட்லாந்தும் இரண்டாம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன.

மற்றொரு தகுதிச்சுற்று ஆட்டத்தில் உக்ரேனை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது இத்தாலி. இண்டர் மிலானின் மத்தியத்திடல் ஆட்டக்காரரான டாவிட் ஃபிரட்டேசி, ஆட்டத்தின் முதல் 30 நிமிடங்களில் இரு கோல்களை போட்டு இத்தாலியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் ‘சி’ பிரிவில் ஏழு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இத்தாலி. உக்ரேன், வட மேஸ்டோனியா அணிகளும் அதே ஏழு புள்ளிகளைப் பெற்றுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!