ரத்த நன்கொடையை தொடர்ந்து வழங்க வேண்டுகோள்

பொதுமக்களுக்கு ஊடகங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்த பிறகு சிங்கப்பூரில் ‘ஓ+’ ரத்த வகை சேமிப்பு 230 விழுக்காடு கூடியிருக்கிறது.

ஆனால் சீனப் புத்தாண்டுக்கு முன்பும் பின்பும் தொடர்ந்து ரத்த நன்கொடை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பண்டிகை காலங்களிலும் நீண்ட வாரயிறுதி நாள்களிலும் ரத்த இருப்பு இருபது விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளது என்று பிப்ரவரி 4ஆம் தேதி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் சுகாதார அறிவியல் ஆணையமும் வெளியிட்ட கூட்டு அறிக்கை தெரிவித்தது.

“தற்போதைய ரத்த நன்கொடையின் வேகம் நீடிக்கவில்லை என்றால், குறிப்பாக சந்திரப் புத்தாண்டைத் தொடர்ந்து முதல் இரண்டு வாரங்களில் ‘ஓ’ வகை ரத்த இருப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

சுகாதார அறிவியல் ஆணையத்தின் தலைமை நிர்வாகியான மிமி சூங் மே லிங், சீனப் புத்தாண்டுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து ரத்த தானம் செய்ய பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

ஜனவரி 25ஆம் தேதி விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று பதிலளித்த 5,300 நன்கொடையாளர்களுக்கு ஆணையமும் சங்கமும் நன்றி தெரிவித்துக் கொண்டன.

தேசிய ரத்த இருப்பில் ‘ஓ+’ மற்றும் ‘ஓ-’ ரத்த வகை வெகுவாகக் குறைந்ததை அடுத்து ரத்த நன்கொடைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!