எளியோருக்கு உதவிக்கரம் நீட்டும் இலவச சட்ட உதவித் திட்டம்

குற்றம் சுமத்தப்பட்ட ஆடவர் ஒருவர் இலவச சட்ட உதவித் திட்டத்தின் பலனை அடைந்துள்ளார். எந்த வசதியும் வேலையும் இல்லாத அவரது தரப்பின் வாதத்தை முன்வைக்க வழக்கறிஞர் ஒருவர், அந்தத் திட்டத்தின்கீழ் இலவச சட்ட உதவியை வழங்கினார். பிரேம்நாத் விஜயகுமார் என்னும் அவர் ‘புரோ போனோ எஸ்ஜி’ என்னும் இலவச சட்ட உதவி அமைப்பின் பிரதிநிதித்துவ உதவி இயக்குநர் ஆவார்.

அந்த அமைப்பின் குற்றவியல் சட்ட உதவித் திட்டத்தின்கீழ் (Clas) அந்த ஆடவர் சட்ட உதவி நாடினார். 40 வயதுகளின் பிற்பகுதியில் உள்ள அந்த ஆடவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தமது வீட்டில் சகோதரருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.

காவல்நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டபோது துணைக் காவற்படை அதிகாரிகளை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக, துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டு உட்பட நான்கு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டு இருந்தன.

கடந்த 2019ஆம் ஆண்டு சட்ட உதவிக்கு விண்ணப்பித்து வழக்கறிஞரின் தொடர்பைப் பெற்ற அவரிடம் பேருந்து, ரயில்களில் பயணம் செய்யும் அளவுக்கு குறைந்தபட்ச வசதிகூட இல்லை. ஓரறை வீட்டில் வசிக்கும் அவரிடம் கைப்பேசியும் இல்லை.

இந்நிலையில், ஹவ்லாக் ஸ்குவேரில் உள்ள அரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞரைச் சந்திக்க அவர் ஜூரோங்கிலிருந்து சைக்கிளில் சென்றார்.

காலை 10 மணிக்குப் புறப்பட்ட ஆடவர் ஐந்து மணிநேர சைக்கிள் பயணத்திற்குப் பிறகு பிற்பகல் 3 மணியளவில்தான் வழக்கறிஞரைச் சந்திக்க முடிந்தது.

ஆடவர் பெற்ற சட்ட உதவி பற்றி திரு பிரேம்நாத் ஜனவரி 29ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளரிடம் விளக்கினார்.

இலவச சட்ட உதவியின்கீழ் தாம் கையாண்ட குற்றவியல் வழக்குகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், “வசதி இல்லாத அந்த ஆடவர், வழக்கு தொடர்பாக என்னை ஏழு முறை சந்தித்தார். ஒரே உடையைத்தான் ஏழு முறையும் அவர் அணிந்து வந்தார். அந்த அளவுக்கு வசதி குறைவானவராக இருந்தார்.

“படுத்த படுக்கையில் நோயாளியாக இருந்த தந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்த அவருக்கு இந்த வழக்கு பெரிய மன உளைச்சலைத் தந்தது.

“தாம் வேண்டுமென்றே அதிகாரிகளைத் துன்புறுத்தவில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். சிறை சென்றுவிட்டால் தமது தந்தையைக் கவனிக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக அரசாங்க சட்ட உதவித் திட்டத்தின் வாயிலாக அவர் என்னைச் சந்தித்தார்,” என்று திரு பிரேம்நாத் கூறினார்.

அரசுதரப்புடனான ரகசியச் சந்திப்பின்போது, ஆடவரின் அவலநிலையையும் தனிப்பட்ட சூழ்நிலையையும் திரு பிரேம்நாத் எடுத்துரைத்தார்.

“சோக நிலையை எடுத்துக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்யக்கூடியது அல்ல எனது பங்கு. ஆடவருக்கு மருந்து உதவி தேவைப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நான் நம்பவில்லை,” என்றார் திரு பிரேம்நாத்.

பல வாரங்களுக்குப் பிறகு அரசுத்தரப்பு அந்த ஆடவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்து, நிபந்தனையுடனான எச்சரிக்கையைப் பிறப்பித்தது. மனநலக் கழகத்தில் சிகிச்சை நாடவேண்டும் என்பதும் அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளுள் ஒன்று.

“வசதி குறைந்தவர்களாக இருந்தாலும் தங்களது தரப்பிலான நியாயத்திற்காக அவர்கள் குரல் எழுப்ப வேண்டியது அவசியம்,” என்றும் திரு பிரேம்நாத் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!