வீணாகும் 2,000 எம்பிபிஎஸ் இடங்கள்

சென்னை: தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த கிட்டத்தட்ட 600 எம்பிபிஎஸ் மாணவர்கள், அவர்களது சேர்க்கையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

செப்டம்பா் 30ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்ட எம்பிபிஎஸ் இடங்கள் செல்லாது என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்திருந்தது.

இதனால், ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருக்கும் 1500 எம்பிபிஎஸ் இடங்களுடன் சேர்த்து ஏறத்தாழ 2,000 எம்பிபிஎஸ் இடங்கள் வீணாகும் சூழல் எழுந்துள்ளது.

“இவ்வாண்டுக்கான எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் அதற்குப் பிறகும் இணையவழி, நேரடிக் கலந்தாய்வு மூலம் எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இந்தச் செயல்பாடுகள் என்எம்சி விதிகளுக்கும், உச்சநீதிமன்ற தீா்ப்புக்கும் புறம்பானவை. எனவே, என்எம்சி அறிவுறுத்தலை மீறி நடத்தப்பட்ட கலந்தாய்வு செல்லாது என்றும், ஒருவேளை மாணவா்களை கல்லூரிகளில் சோ்த்திருந்தால் அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” என என்எம்சியின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் தகவல் வெளியிட்டார்.

கடுமையான நீட் தேர்வுகளில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காமல் மருத்துவப் படிப்புக்காகக் காத்திருக்கும் நிலையில் 2000 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!