விஜய் ஆண்டனி: தமிழ் சினிமாவை குறை சொல்லாதீர்கள்

தான் நடித்த ‘ரோமியோ’ படத்தை தவறாக விமர்சிப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் விஜய் ஆண்டனி.

விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ரோமியோ’. மிகச் சுமாரான வரவேற்பையே இப்படம் பெற்றது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தன.

இந்நிலையில் படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு கடுமையான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி.

“பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் சிலருக்கும் இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி ‘ரோமியோ’ போன்ற பல நல்ல படங்களைக் கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

“என் அன்பு மக்களே, ‘ரோமியோ’ ஒரு நல்ல படம், போய் பாருங்கள் புரியும். ‘ரோமியோ’ படத்தை ‘அன்பே சிவம்’ போல் ஆக்கிவிடாதீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில், கமல்ஹாசன், மாதவன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ‘அன்பே சிவம்’ படம் வசூல் ரீதியாக ஓடவில்லை என்றாலும் அந்தப் படம் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு படத்துடன் ‘ரோமியோ’ படத்தை விஜய் ஆண்டனி ஒப்பிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!