சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் திருமணத் தரகுக் கட்டணங்களைக் கட்டுப்படுத்த தீர்வு

ஜியாங்சி: சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் அதிகரித்துவரும் மணப்பெண் விலைக்கு எதிராக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், ஜியாங்சி மாநிலத்தில் உள்ள கொள்கை ஆலோசகர் ஒருவர் அதற்கான தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்துள்ளார்.

ஜியாங்சி மாநிலக் குழு உறுப்பினரான லான் வென், கிராமப்புறத் திருமணத் தரகர்களுக்குப் புதிய சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை முன்வைத்தார்.

இணையத்தில் வாழ்க்கைத் துணையைக் கண்டுபிடிக்க உதவும் செயலிகள் பிரபலமாக உள்ளபோதும், சீனாவின் கிராமப்புறப் பகுதிகளில் திருமணமாகாத பல இளையர்கள் தொடர்ந்து பாரம்பரிய திருமணத் தரகர்களையே சார்ந்திருப்பதாக அவர் கூறினார்.

கிராமப்புறத் திருமணத் தரகர்கள் வரதட்சணையிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுகின்றனர். திருமணத் தரகர்கள் 3 விழுக்காட்டுக்கும் 5 விழுக்காட்டுக்கும் இடையே கட்டணம் விதிப்பது பொதுவாக நடக்கும் ஒன்று எனக் கூறிய திருவாட்டி லான், சிலர் 15 விழுக்காடுவரை கட்டணம் விதிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

இதனைச் சமாளிக்க, திருமணத் தரகர் சங்கங்கள் அமைக்கப்படவேண்டும் என்று திருவாட்டி லான் பரிந்துரைத்தார். கிராமப்புறத்தில் உள்ள நிபுணத்துவ திருமணத் தரகர்கள் அவற்றில் பதிவுசெய்து பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.

அதோடு, திருமணத் தரகர் துறையில் முறையற்ற வழியில் லாபம் ஈட்டுவதைத் தவிர்க்க, கண்டிப்பான கண்காணிப்பும், சட்ட அமலாக்கமும் முக்கியம் என்றும் திருவாட்டி லான் வலியுறுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!