You are here

திரைச்செய்தி

குத்துப்பாடல் பாடியுள்ள ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன்

ரம்யா நம்பீசன் நல்ல நடிகை மட்டுமல்ல, இனிய குரலில் பாடல்களையும் பாடக்கூடியவர் என்பது தெரிந்த விஷயம்தான். தற்போது அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் திரைப்படப் பாடல்கள் பாடும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம். தற்போது ‘கூத்தன்’ என்ற புதிய படத்தில் குத்துப்பாட்டு ஒன்றைப் பாடியுள்ளார் ரம்யா நம்பீசன். ‘காதல் காட்டுமிராண்டி’ என்று துவங்கம் அப்பாடலை உற்சாகமாகப் பாடியதாகக் கூறுகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில், நடன இயக்குநரும் நடிகருமான நாகேந்திர பிரசாத் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ்

உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் இணைந்து நடித்திருக்கும் படம் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’. ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தளபதி பிரபு இயக்கி உள்ளார். “உதயநிதி முதல்முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கும் படம் இது. அவருக்கு நண்பராக சூரி நடிக்கிறார். “பார்த்திபன் முக்கிய கதா பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுவார்கள்.

சான்றிதழ் தர மறுத்த தணிக்கை குழு: குமுறும் இயக்குநர்

துருவா, அஞ்சனா

‘திலகர்’ படத்தில் நடித்த துருவா நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’. இதில் அஞ்சனா, ஐஸ்வர்யா தத்தா என இரு புதுமுகங்கள் கதாநாயகி களாக அறிமுகமாகி உள்ளனர். இப்படத்தை ராகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் முழுமை அடைந்துள்ள நிலையில், அண்மையில் இப்படத்தை தணிக்கைக் குழுவுக்கு திரையிட்டுள்ளனர். இறுதியில் எந்தச் சான்றிதழும் தராமல் புறக்கணித்து விட்டதாம் தணிக்கைக் குழு.

கவர்ச்சிப் பாதைக்கு மாறிய கேத்தரின்

கேத்தரின் திரேசா

கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்களையும் திரையுலகம் வெகு சீக்கிரமாக மாற்றிவிடும்போல் இருக்கிறது. கவர்ச்சி என்றால் தமக்கு அறவே பிடிக்காது என்று திட்டவட்டமாகக் கூறிவந்த இளம் நாயகி கேத்தரின் திரேசாவும் தற்போது இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ‘மெட்ராஸ்’ படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், ஆர்யாவுடன் ‘கடம்பன்’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கிலும் வாய்ப்புகள் தேடி வந்தன. அண்மையில் இவர் நடித்து வெளியான ‘காதம் நந்தா’ தெலுங்குப் படம் நல்ல வசூலைத் தந்துள்ளதாம். கோபிசந்த் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஹன்சிகாவும் மற்றொரு நாயகியாகத் தோன்றியுள்ளார்.

‘தெரு நாய்கள்’

தமிழகத்தில் எரிவாயு எடுப்பதற்காக குழாய்கள் பதிப்பதை எதிர்க்கும் படைப்பாக உருவாகி வருகிறது ‘தெரு நாய்கள்’. இதில் அப்புக்குட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரதிக், ‘கோலிசோடா’ நாயுடு, மைம்கோபி, இமான் அண்ணாச்சி ஆகியோரும் உள்ளனர். புதுமுகம் அக் ஷதா நாயகியாக அறிமுகமாகிறார். “டெல்டா மாவட்டத்தின் இன்றைய முக்கியப் பிரச்சினையாக இருக்கும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரான பன்னாட்டு நிறுவனங்களின் எரிவாயுக் குழாய் பதிப்பதை எதிர்க்கும் பதிவாக இப்படத்தின் கரு அமைந்துள்ளது.

தனுஷ்: இது மகிழ்ச்சியும் மனநிறைவும் தரும் காலகட்டம்

தனுஷ்

தமது படங்கள் பலதரப்பட்ட மக்களைச் சென்றடைவது மகிழ்ச்சியைத் தருவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் படத்தில் நடித்திருப்பதன் மூலம் தாம் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளதாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களில் நடித்ததன் மூலம் இந்தித் திரையுலகை நன்கு புரிந்துகொள்ள முடிந்ததாகக் குறிப்பிடுபவர், இந்தி படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார். “தற்போது நான் நடித்து வரும் படங்கள் பலதரப்பட்ட மக்களைச் சென்றடைகின்றன. தற்போது உலகம் மிகச் சிறியதாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழல் வேறு.

முதல் வெற்றி: சந்தானம் படக்குழு உற்சாகம்

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா

சந்தானம் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’ படத்திற்கு தணிக்கைக் குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளித் துள்ளனர். இது அப்படக் குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “எங்களைப் பொறுத்தவரை இது முதல் வெற்றியாகவே கருதுகிறோம். படம் விரைவில் திரைகாண உள்ள நிலையில், தணிக்கைக் குழுவின் ஆதரவு எங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள் ளது,” என்கிறார் படத்தின் இயக்குநர் ஆனந்த் பால்கி. கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சந்தானம் ஜோடியாக, ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் அவருடன் இணைந்து நடித்த வைபவி சாண்டில்யா நடித்துள்ளார்.

ஆத்மிகாவின் ஆசைகள்

ஆத்மிகா

‘மீசைய முறுக்கு’ படத்தின் நாயகி ஆத்மிகாவுக்கு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெறும் நடிகையாக மட்டுமல்லாது பாடகியாகவும் ஜொலிக்கிறார். கணினித் துறையில் பட்டப்படிப்பை முடித்தவர், பெங்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். ஆறுமாத காலம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தவருக்கு, திடீரென அப்பணி அலுத்துப் போனதாம். உடனடியாக வேலையை விட்டு விலகியவர், இனிமேல் திரையுலகில் நடிப்பதுதான் லட்சியம் என்று வீட்டாரிடம் தெரிவிக்க, அவர்களும் உற்சாகப்படுத்தி உள்ளனர்.

சிம்புவின் புதுப்பட அறிவிப்பு

தனது புதுப்படம் குறித்த அறிவிப்பைத் தற்போது வெளியிட் டுள்ளார் சிம்பு. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை சிம்பு ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த் திருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அப்படம் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் முன்பே முக்கால் வாசி படமாக்கப்பட்ட ‘கெட்ட வன்’ என்ற படத்தை சிம்பு மீண் டும் தூசி தட்டி இருப்பதாகத் தக வல் வெளியானது. மேலும் ‘பில்லா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்பட்டது.

நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய ‘இமை’

‘இமை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நாயகன் சரிஷ், நாயகி அட்சய பிரியா.

பொதுவாக மலையாள இயக்குநர் கள் தமிழில் இயக்கும் படங்க ளுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக உள்ளது. இயக்குநர் கள் பாசில், சித்திக், ஷாஜி கைலாஷ் ஆகிய இயக்குநர்களின் படங்களே இதற்கு நல்ல உதாரணம். இந்நிலையில் மேலும் ஒரு மலையாள இயக்குநர் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத் துள்ளார். அவர் விஜய்.கே. மோகன். மலையாளத்தில் ‘நளசரி தம் நாலாம் திவசம்’, ‘வேனல் மரம்’ உட்பட ஏராளமான படங் களை இயக்கிய இவர், தமிழில் ‘இமை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சரிஷ், அட்சய பிரியா இருவரும் ஜோடி சேர்ந் துள்ளனர். சரி‌ஷுக்கு இதுதான் முதல் படம்.

Pages