You are here

இந்தியா

நீட் தேர்வு: தமிழக நீதிமன்றத்தின் தடையை நீக்கியது டெல்லி உச்சநீதிமன்றம்

கோப்புப்படம்: மதுரை உயர்நீதிமன்றக் கிளை

புதுடெல்லி: தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம் பியுள்ள நிலையில், ‘நீட்’ தேர்வுக்கான முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு கடந்த மாதம் 24ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு மொழிகளில் இத்தேர்வை எழுதினர். இதனால் சர்ச்சை வெடித்தது. ஆங்கிலம், தமிழ் மொழிகளில் அமைந்த வினாத்தாள்களில் பெரியள வில் வேறுபாடுகள் இருந்த தாகக் கூறப்பட்டது. எனவே இத்தகைய தேர்வு முறையை ஏற்க இயலாது எனப் பலர் குரல் எழுப்பினர்.

இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற போட்டி

சசிகலா

சென்னை: இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவதில் அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே போட்டா போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அச்சின்னத்திற்கு உரிமை கோரும் சசிகலா அணி சார்பில், தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 1.52 லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு நான்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டன. இதுவரை சசிகலா தரப்பில் நான்கு தவணைகளாக மொத்தம் 3.10 லட்சம் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கான பாதுகாப்பு: நடிகை வரலட்சுமி கோரிக்கை

நடிகை வரலட்சுமி

சென்னை: பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை வரலட்சுமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், தமிழகத்தில் மகளிர் நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

ஜெயகுமார்: இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை அவசியம்

நிதி அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: அதிமுகவின் இரு அணிகள் இணைய வேண்டும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார். இரு அணிகள் இணைப்புக்காக அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே பொதுமக்கள், அதிமுகவினரின் விருப்பம்,” என்றார் ஜெயகுமார். “குழு ஏன் கலைக்கப்பட்டது என்பதை பன்னீர்செல்வம் தான் விளக்க வேண்டும். பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

விவசாயிகள் நிலை: நடிகர் விஜய் கவலை

நடிகர் விஜய்

சென்னை: நாட்டு மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் விவசாயிகளின் நிலை இன்று நன்றாக இல்லை என நடிகர் விஜய் கூறியுள்ளார். எந்தவொரு பலனுமே கிடைக்காமல் போராடும் விவசாயிகளை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். “மனிதர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர்கள் விவசாயி கள். பசியை எளிதாகக் கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை எனத் தோன்றுகிறது,” என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி பதவிகளுக்கு ‘நீட்’ போன்ற தேர்வுக்கு மத்திய அரசு பரிந்துரை

புதுடெல்லி: கீழ் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு மருத்துவப் படிப்புக்கு உள்ளதுபோல் ‘நீட்’ நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றத்துக்கு அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதற்கு பாஜக ஆளும் மாநிலம் உட்பட எதிர்ப்பு தெரிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2015 டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவலின்படி 4,452 நீதிபதிக்கான பதவி இடங்கள் காலியாக உள்ளன.

அதிபர் தேர்தல் வேட்பாளர்; ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்கள் ஆலோசனை

புதுடெல்லி: தற்போதைய அதிபர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் நிறைவடை வதால் புதிய அதிபர் வேட்பாளரைத் தேர்வுசெய்யும் பணிகளை ஆளும் பாஜக முடுக்கிவிட்டுள்ளது. இதையொட்டி பாஜக தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் முயற்சி செய்து வரு கின்றன. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அனைத்துக்கட்சி தலைவர் களைக் கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளார்.

கொள்கையில் இருந்து தளர்ந்தது கிடையாது: சகாயம் பேச்சு

சென்னை: தமது 24 ஆண்டுகால பணிக் காலத்தில் கொள்கையில் இருந்து ஒருபோதும் தளர்ந்தது கிடையாது என நேர்மையான செயல்பாட்டிற்குப் பெயர் பெற்ற சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய அவர், ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து’ என்று திரும்பத் திரும்பச் சொல்வதால்தான், கடந்த 24 ஆண்டுகளில் தாம் 24 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “நான் மதுரை ஆட்சியராக இருந்தபோது, எனக்கு 200 கோடி ரூபாய் வரை கொடுக்கத் தயாராக இருந்ததாகத் தகவல். எனக்கு சுடுகாட்டில் படுக்கக்கூட பயமில்லை; ஆனால் சுதந் திர நாட்டில் இருக்கத்தான் பயமாக உள்ளது,” என்றார் சகாயம்.

விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

படம்: தமிழக ஊடகம்

சென்னை: வறட்சி நிவாரணம், ஓய்வூதியம் குறித்த தங்களின் கோரிக்கைகளை முதல்வர் பரி சீலனை செய்வதாகக் கூறியுள்ளார் என அய்யாக்கண்ணு கூறினார். அதனை யொட்டி போராட்டத்தைத் தற்காலிகமாக மீட்டுக் கொள்வ தாக விவசாயிகள் அறிவித்துள்ள னர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி யைத் தேசிய தென்னிந்திய நதி கள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார். விவ சாயிகளின் கோரிக்கை தொடர் பாக முதலமைச்சருடன் அய்யாக் கண்ணு பேச்சுவார்த்தை நடத்தி னார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி

கோவை: மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வருவ தால் அதிமுக ஆட்சி மீது யாரும் குறைகூற முடியாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா அறிவித்த படி எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைக்கப்படும் என் றும் இதற்காக மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் அந்த மருத்துவமனை கட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். “மதிமுக பொதுச்செயலர் வைகோ மலேசியாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்,” என்றார் முதல்வர் பழனிசாமி.

Pages