இந்தியா

ஹைதராபாத்: “தெலுங்கானாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான நிலங்களைக் குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேதான் போட்டி,” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவில் வசுந்தரா ஓரம்கட்டப்படுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
மதுரையில் புத்தகத் திருவிழா தொடங்கியதை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி சனிக்கிழமை காலையில் உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் சங்க இயக்குநர் அருள் அவ்வை தலைமையில் சிங்கப்பூர் எழுத்தாளர் மா. அன்பழகனின் சரித்திரப் புனைவு நூலாகிய “செம்பியன் திருமேனி“ என்ற நூலைப் பட்டிமன்ற நாயகனும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வெளியிட பிரபல எழுத்தாளர் இந்திர சவுந்தரராசன் பெற்றுக்கொண்டார்.
மும்பை: மதம் மாறி திருமணம் செய்த மகளை அவரது கணவருடன் ஆணவக் கொலை செய்த பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வரும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்புடைய பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் என செப்டம்பர் மாதம் அக்கட்சித் தலைமை அறிவித்தது.