ராகுல் காந்தி: கேசிஆர்-ஐ மட்டும் சிபிஐ விட்டுவைப்பது ஏன்?

ஹைதராபாத்: “தெலுங்கானாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான நிலங்களைக் குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேதான் போட்டி,” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

நவம்பர் 30ஆம் தேதி தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அங்கு போட்டியிடும் கட்சிகள் விறுவிறுப்பான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் முக்கியத் தலைவரும் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெலுங்கானா சென்றுள்ளார்.

ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் நடந்துவரும் விஜயபேரி நடைப்பயணத்தில் வியாழக்கிழமை கலந்துகொண்டார். அதில், பூபால்பள்ளியில் இருந்து பெத்தாபள்ளி செல்லும் வழியில் நடந்த தெருமுனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், “இந்தத் தேர்தலில் கே.சந்திரசேகர ராவ் தோல்வியைத் தழுவுவார். இந்தத் தேர்தலில் டோரலா (செல்வந்தர்கள்) தெலுங்கானாவுக்கும் பிரஜலா தெலுங்கானாவுக்கும் (குடிமக்கள்) இடையேதான் போட்டி நடக்கிறது.

“அதாவது ராஜாவுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான போட்டி இது. இந்த பத்தாண்டு கால ஆட்சியில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர் எனப்படும் கே.சந்திரசேகரராவ் தொடர்ந்து மக்களின் குறைகளுக்குச் செவிசாய்க்காமல் அவர்களிடம் விலகியே இருக்கிறார். மாநிலத்தில் ஊழல்கள் மலிந்து காணப்படுகின்றன. மாநிலத்திற்கான அனைத்து அதிகாரங்களையும் ஒரு குடும்பத்தினர் மட்டுமே வைத்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்து வருகின்றனர்.

“மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாடு முழுதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையை ஏவிவிட்டு வழக்குகள் பதிந்து வருகிறது. ஆனால், இங்கு கேசிஆரை மட்டும் காப்பாற்றி வருகிறது. ஊழலில் மூழ்கிப்போன கேசிஆர் மீது சிபிஐ அல்லது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்காதது மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!