You are here

சிங்க‌ப்பூர்

பள்ளிவாசல் கட்டுமான நிதி பங்களிப்பு உயர்கிறது

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம்

பள்ளிவாசல் கட்டுமானம், மெண் டாக்கி நிதிக்கு (எம்பிஎம்எஃப்) முஸ்லிம்கள் அளித்து வரும் மாதாந்திர பங்களிப்பு ஜூன் 1ஆம் தேதி முதல் கூடுகிறது. சிங்கப்பூர் இஸ்லாமிய மையத் தில் நேற்று நடந்த சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்ற (முயிஸ்) பணித்திட்டக் கருத்தரங்கின் போது இந்த மாற்றங்களை அறிவித்தார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம். கடந்த 2009ஆம் ஆண்டிற்குப்பின் நிதிப் பங்களிப்பில் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறை.

ஜெம் கடைத்தொகுதியில் நீர்க்கசிவு

ஜெம் கடைத்தொகுதியில் நீர்க்கசிவு

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள ஜெம் கடைத் தொகுதியில் மேலும் ஒரு நீர்க்கசிவு ஏற்பட்டது. வெள்ளிக் கிழமை இரவு 8 மணியளவில் அக்கடைத் தொகுதியின் மூன்றா வது தளத்தில் உள்ள ‘இண் டோபாக்ஸ்’ உணவகத்தினுள் நீர்க்கசிவு ஏற்பட்டதாக கான் வெய் என், 35, என்பவர் ஊட கங்களிடம் தெரிவித்தார். அந்த உணவகத்தின் தளம் முழுவதும் நீர் காணப்பட்டதாகவும் சமையலறைக் கழிவைப் போன்ற நாற்றம் அதிலிருந்து வந்ததாகவும் அவர் சொன்னார்.

மாணவர்களின் சேமிப்புத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு பலனளிக்கும் திட்டம்

லத்திஃப் குமார்,10.

மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தையும் கற்றல் ஆர்வத்தை யும் ஊக்குவிக்கும் நோக்கில் வட மேற்கு சமூக மேம்பாட்டு மன்ற ஏற்பாட்டில் ‘Maybank Star [email protected] West’ என்னும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், மே பேங்க், பள்ளிகள் மற்றும் சமூக மன்றங்கள், சமூக நிலை யங்கள் ஆகியவற்றின் பங்காளித் துவத்துடன் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர். ஆண்டு ஒன்றுக்கு 60 வெள்ளி சேமிப்பதன் மூலம் மாணவர்கள் 600 வெள்ளி மதிப்பிலான பயிற்சித் திட்ட உதவிகளைப் பெறுவர்.

புக்கிட் பாத்தோக் மசெக எம்.பி. விலகல் - இடைத் தேர்தல் அறிவிப்பு

 டேவிட் ஓங், 54,

ஆளும் மக்கள் செயல் கட்சி அரசியல் வாதியான டேவிட் ஓங், 54, சொந்தக் காரணங்களுக்காக புக்கிட் பாத்தோக் நடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் விலகி இருக்கிறார். அவரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் லீ சியன் லூங், அந்தத் தனித்தொகுதிக்கு குறித்த காலத்தில் இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.

டெங்கியால் 63 வயது மாது மரணம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டெங்கிக் காய்ச்­ச­லால் பாதிக்கப்­பட்­டி­ருந்த 63 வயது மாது ஒருவர் சாங்கி பொது மருத்­து­வ­மனை­யில் நேற்று முன்­தி­னம் உயிர் இழந்தார். பிடோக் நார்த் ஸ்திரீட் 3ல் தங்­கி­யி­ருந்த அந்த மலாய் மாது, புதன்­கிழமை மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார். உடல்நிலை மோசமடைந்து வியாழன் அன்று அவர் மரணம் அடைந்தார் என சுகாதார அமைச்­சும் தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. டெங்கிக் காய்ச்சல் உயர்வதைத் தடுப்பதில் ஒரே சமூகமாகத் தொடர்ந்து செயல் பட்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அதிபர் தேர்தலில் மீண்டும் டான் செங் போக் போட்டி

டாக்டர் டான் செங் போ. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் அடுத்த அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்குள் நடக்க இருக்கிறது. தான் அதில் போட்டியிடப்போவதாக டாக்டர் டான் செங் போக் நேற்று அறிவித்தார். டாக்டர் டான் 2011ல் நடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த வர் என்பது குறிப்பிடத்தக்கது. “அதிபர் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் இருக்கின்றன. என் முடிவை இப்போது தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். 2017 தேர்தலில் போட்டியிட நான் விரும்புகிறேன்,” என்று டாக்டர் செங் போக் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

மறுபரிசீலனையில் மின்தூக்கி விதிமுறைகள்

மறுபரிசீலனையில் மின்தூக்கி விதிமுறைகள்

அண்மை­யில் ஏற்­பட்ட தொடர் மின்­தூக்கி விபத்­து­களை அடுத்து இங்­குள்ள மின்­தூக்­கிகள் பாது­காப்­பா­ன­தாக இயங்­கு­கின்ற­னவா என்­பதைச் சோதிப்­பது, அதற்­கான ஒழுங்கு விதி­முறை­களை மறு­ப­ரி சீ­லனை செய்­வது போன்ற செயல்­களில் அதி­கா­ரி­கள் இறங்­கி­யுள்­ள­னர். மின்­தூக்­கிகள் பாது­காப்­பாக இயங்­கு­வது உறுதி செய்­யப்­பட வேண்­டும் என்று அமைச்­சர் லாரன்ஸ் வோங், கட்டட, கட்­டு­மான ஆணை­யத்­தி­டம் கேட்­டுக்­கொண்டுள்ளார். சமூக வலைத்­த­ள­மான ஃபேஸ்­புக்­கில் அவர் இதனை பதி­வேற்­றம் செய்­துள்­ளார். அண்மைக் கால­மாக மின்­தூக்கி விபத்­து­கள் தொடர் நிகழ்­வா­கிக் கொண்­டி­ருக்­கின்றன.

வடிகட்டி இயந்திரங்கள் பரிசளிப்பு

சிங்கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன்

பேரி­டர் மேலாண்மை மனி­தா­பி­மான உதவி, ஆசி­யான் ஒருங்­கிணைப்பு மையத்­திற்கு சிங்கப்­பூ­ரின் ‘தி கார்ப்­ப­ரேட் சிட்­டி­சன் ஃப­வுண்­டே­ஷன்’ (சிசி­எ­ஃப்) 10 தண்­ணீர் வடி­கட்டி இயந்­தி­ரங்களைப் பரி­சாக அளித்­துள்­ளது. பேரி­டர் காலங்களில் பயன்­படுத்­து­வ­தற்­காக வடி­வமைக்­கப்­பட்ட இந்தக் கருவி ஒரு மணி நேரத்­தில் 500 லிட்டர் அழுக்கு நீரை வடி­கட்டி குடி­நீ­ராக வழங்­கும். வடி­கட்டி இயந்­தி­ரங்களைப் பரி­சாக அளிக்­கும் நிகழ்ச்­சி­யில் சிங்கப்­பூர் வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் கலந்துகொண்டார். படம்: எஸ்பிஎச்

பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

டோ டக் அவென்­யூ­வில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் பொதுப் பேருந்­தில் சிக்கி 29 வயது இந்தோனீசியப் பெண் மர­ணம் அடைந்தார். பிற்­ப­கல் 12.30 மணிக்கு குமாரி வின்னி பிரா­டிவி என்ற அந்தப் பெண் மதிய உணவு சாப்­பி­டச் சென்ற­போது இந்த விபத்­தில் சிக்கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த விபத்து தொடர்­பாக 50 வயது பேருந்து ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். பேருந்து வலது பக்கம் வளை­யும்­போது குமாரி பிரா­டிவி பேருந்­தில் சிக்­கி­ய­தாக நம்பப்­படு­கிறது. சம்ப­வம் அறிந்து பிரா­டி­வி­யின் தாயார் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்கப்­பூ­ருக்கு வந்­துள்ளார்.

1எம்டிபி தொடர்பிலான விசாரணை: வங்கி அதிகாரி வேலையிலிருந்து விலகினார்

மலே­சி­யா­வின் பிரச்­சினைக்­ கு­ரிய 1எம்டிபி தொடர்­பி­லான வங்கிக் கணக்­கு­களைக் கையாண்ட­தா­கக் கூறப்­படும் தனியார் வங்கி அதிகாரி வேலை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுவிட்­சர்­லாந்து தனியார் வங்­கி­யான பிஎஸ்ஐ சிங்கப்­பூ­ரில் யாக் யேவ் சீ என்ற அந்த அதிகாரி மூத்த உதவித் தலைவ-ராக பணி­யாற்றி வந்தார். தற்போது 1எம்டிபி தொடர்­பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்­ற­வி­யல் விசா­ரணையை அவர் எதிர்­நோக்­கு ­கிறார். “தற்போது வங்­கி­யில் அவர் இல்லை,” என்று பிஎஸ்ஐ வங்­கி­யின் பேச்­சா­ளர் ஒருவர் தெரி­வித்­தார்.

Pages