You are here

உல‌க‌ம்

பிரிட்டிஷ் ஊடகம்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டன

லண்டன்: இலங்கை இறுதிக் கட்ட போரில் ‘க்ளஸ்டர்’ கொத் துக் குண்டுகள் வீசப்பட்டன என்று பிரிட்டனின் தி கார்டியன் நாளிதழ் புகைப்பட ஆதாரத் துடன் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இலங்கை அரசுக்குக் கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இறுதிக் கட்ட போரின்போது, இலங்கையின் ராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களி னால் பொதுமக்கள் கொல்லப் பட்டதை ஏற்றுக்கொள்வதாக இலங்கை அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ஒப்புக்கொண்டுள்ளது.

துப்பாக்கி கட்டுப்பாடு மசோதாவை அமெரிக்க செனட் நிராகரித்தது

வா‌ஷிங்டன்: துப்பாக்கி கட்டுப்பாடு தொடர்பான நான்கு மசோதாக் களை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது. பயங்கரவாத கண்காணிப்புப் பட்டியலில் உள்ளவர்களுக்கு துப்பாக்கி விற்பதை கட்டுப் படுத்துவது உள்ளிட்ட நான்கு மசோதாக்கள் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டன. ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் ஓர் இரவு கேளிக்கை விடுதியில் ஒரு துப்பாக்கிக்காரன் 49 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கி கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குவது குறித்த யோசனைகள் அமெரிக்க செனட் சபையில் முன் வைக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருக்க தலைவர்கள் முயற்சி

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத் தில் பிரிட்டன் தொடர்ந்து உறுப்பு நாடாக இருக்குமா? அல்லது அதிலிருந்து பிரிட்டன் விலகுமா என்ற சர்ச்சை நீடிக்கும் வேளை யில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்பதே ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும் ஊடகங் களின் விருப்பமாக உள்ளது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத் திருப்பதற்கு ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஐரோப்பியத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல்; பிரசல்ஸில் ஒருவர் கைது

வெடிகுண்டு மிரட்டல்; பிரசல்ஸில் ஒருவர் கைது

பிரசல்ஸ்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸில் உள்ள ஒரு பேரங்காடி நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக நேற்று ஒருவன் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து போலிசார் அங்கு மேற்கொண்ட தீவிர சோதனையின் போது ஒருவனைக் கைது செய்தனர். மனநல பிரச்சினையுள்ள அந்த ஆடவர், உப்பும் ரொட்டியும் நிரம்பிய ஒரு போலி இடைவாரை இடுப்பில் கட்டியிருந்ததாக போலிசார் கூறினர். அந்த ஆடவர் முன்னதாக போலிசாருடன் தொடர்புகொண்டு தான் வெடிபொருள் வைத்திருப் பதாகக் கூறியதாக பெல்ஜிய ஊடகத் தகவல்கள் கூறின. இதனையடுத்து பிரசல்ஸில் அமைந்துள்ள சிட்டி2 எனப்படும் பரபரப்புமிக்க அந்த பேரங்காடி நிலையம் மூடப்பட்டது.

மெக்சிகோவில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ள கல்வி சீர்திருத்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை ஆசிரியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மெக்சிகோவில் சாலை மறியல் போராட்டத்தில் ஆசிரியர் கள் ஈடுபட்டதைத் தொடர்ந்து போலிசார் அதில் குறுக்கிட்டதால் போலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாகவும் அதிகாரி கள் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தென்கொரியாவில் பலத்த பாதுகாப்பு

சோல்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள் தென்கொரிய மக்களையும் அங்குள்ள அமெரிக்க ரா-ணுவத் தளங்களையும் குறிவைத்து தாக்கக்கூடும் என்று உளவுத் தகவல் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து அந்நாடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

உலகில் அகதிகள் எண்ணிக்கை 65 மில்லியனை எட்டியது

ஜெனிவா: உள்நாட்டில் நடக்கும் சண்டை காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உலகில் அகதிகளாக வாழ்வோரின் எண்ணிக்கை 65.3 மில்லியனை எட்டியிருப்பதாகவும் இது சாதனை அளவாகும் என்றும் அகதிகளுக்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய அகதிகள் எண்ணிக்கை, பிரிட்டிஷ் மக்கள் தொகையைவிட அதிகம் என்று என்று கூறப்படுகிறது.

நஜிப்: மகாதீரின் பொய்கள் நிராகரிப்பு

மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக்

பெட்டாலிங் ஜெயா: இடைத்­தேர்­த­லில் தேசிய முன்­ன­ணிக் கட்சி மாபெரும் வெற்றி வாகை சூடி­யி­ருப்­பது டாக்டர் மகாதீர் முக­ம­து தமக்கு எதிராகக் கூறிய பொய்களை மக்கள் நிரா­க­ரித்­தி­ருப்­பதைக் காட்­டு­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக் கூறி­யுள்­ளார். எதிர்க்­கட்­சி­யில் ஏற்­பட்­டுள்ள பிளவும் ஆளுங்கட்­சிக்கு சாத­க­மாக அமையவே, தேசிய முன்னணி வேட்­பா­ளர்­கள் நேற்று முன்­தி­னம் சுங்கை புசார், கோலா கங்­சா­ரில் நடந்த இடைத் தேர்­த­லில் கூடுதல் வாக்குகள் வித்­ தி­யா­சத்­தில் வெற்­றி பெற்றனர்.

புகைப்படத்துக்காக சுறா மீனை வதைத்த ‘பாதுகாவலர்கள்’

புகைப்படத்துக்காக சுறா மீனை வதைத்த ‘பாதுகாவலர்கள்’

டொமினிக் குடியரசில் உள்ள கடற்கரை ஒன்றில் கடற்கரைப் பாதுகாவலர்கள் சுறா மீனை கடலுக்குள் இருந்து கரைக்கு இழுத்து வந்து புகைப்படம் எடுத்தபோது அந்தச் சுறா மீன் இறந்து போனது. ஏழு பாதுகாவலர்கள் கடலுக்குள் இருந்த சுறாமீனை கரைக்கு இழுத்துச் சென்றதைக் காட்டும் காணொளி யூடியூபில் சென்ற செவ்வாய்க்கிழமை பதிவேற்றப்பட்டது. ஹார்ட் ராக் ஹோட்டல், கெசினோ அமைந்துள்ள புன்டா கானாவுக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒளித்து வைக்கப்பட்ட 570 கைபேசிகள்; எழுவர் கைது

ஷென்ஸென்: உடலைச் சுற்றி 197,000 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 570 புதிய ரக கைபே­சி­களை மறைத்து வைத்­தி­ருந்த ஏழு பேரை சீனா= ஹாங்காங் இடை­யி­லான ஷென்ஸென் சுங்கச் சாவ­டி அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர். ஷென்ஸென் சுங்கச் சாவ­டி­யில் சென்ற செவ்­வாய்க்­கிழமை மேற் கொண்ட சோதனையில் இடை­வா­ரி­லும் கால்­களி­லும் ஏழு ஆடவர்கள் கைபேசி களை ஒளித்து வைத்திருந்தது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. கைது செய்­யப்­பட்ட­ ஏழு ­பே­ரும் சட்­ட­வி­ரோ­த­மாக அடிக்­கடி பொருட்­களைக் கடத்­தி­யது விசாரணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

Pages