உல‌க‌ம்

பாக்தாத்: ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் பகுதியில் இஸ்‌ரேலிய உளவுத்துறை செயல்பட்டு வந்ததாகவும் அங்கிருந்த அதன் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானின் புரட்சிப் படை தெரிவித்துள்ளது.
ஜெனிவா: உக்ரேனுக்கு இவ்வாண்டு மனிதாபிமான உதவி வழங்கவும் அந்நாட்டைவிட்டுத் தப்பியோடிய மில்லியன்கணக்கான அகதிகளுக்குக் கைகொடுக்கவும் 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் (5.6 பில்லியன் வெள்ளி) தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) தெரிவித்துள்ளது.
காஸா : காஸாவில் போர் தொடர்பாக பெரிய அளவிலான, அதிகாரபூர்வமான அமைதி மாநாட்டிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
மணிலா: தென்சீனக் கடலில் தான் சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அமைந்துள்ள தீவுகளை பிலிப்பீன்ஸ் மேம்படுத்தும் என்று அந்நாட்டின் ராணுவத் தலைவரான ஜெனரல் ரோமியோ பிரானர் திங்கட்கிழமையன்று (ஜனவரி 15) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தைப்பே: தைவானிய அதிபர் தேர்தலை அடுத்து பசிபிக் பெருங்கடலில் தீவுகளைக் கொண்ட நாடான நவுரு, தைவானுடனான தனது அரசதந்திர உறவை துண்டித்துக்கொண்டு சீனாவை அங்கீகரித்துள்ளது.