ஆறு வாரங்களுக்கு அடங்காத ஆரவாரம்

இந்தியாவில் இது பண்டிகைக் காலம்.

நன்னாள்களைக் கொண்டாட மக்கள் உள்ளக்களிப்புடன் பரபரப்பாக ஆயத்தமாகி வருவர்.

இந்நிலையில், 13வது உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் அங்கு தொடங்கிவிட்டதால் மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதான்.

அதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தது, முதல் போட்டியிலேயே தகர்க்கப்பட்ட பல சாதனைகள்.

நாலாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில், போகப் போக இன்னும் பல வியப்புகளும் அதிர்ச்சிகளும் காத்திருக்கலாம் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது அகமதாபாத்தில் கடந்த ஐந்தாம் தேதி இடம்பெற்ற இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி.

சென்ற முறை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் போராடித் தோற்ற நியூசிலாந்து, இம்முறை அதற்கு வஞ்சம் தீர்க்கும் வகையில், கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாததுபோல் இங்கிலாந்து வீரர்களின் பந்துகளை வெளுத்து வாங்கியது.

இந்திய பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர், பிஎஸ்எல் (பாகிஸ்தான்), பிக் பேஷ் லீக் (ஆஸ்திரேலியா), சிபிஎல் (வெஸ்ட் இண்டீஸ்) உட்பட கிரிக்கெட் அதிகமாக விளையாடப்படும் நாடுகளிலெல்லாம் டி20 போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இவையெல்லாம் போதாதென்று, ஈராண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் வேறு.

இப்படி, மூன்று மணி நேரத்தில் விளையாடப்படும் டி20 போட்டிகளில் ரசிகர்களும் விளையாட்டாளர்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னணி விளையாட்டாளர்கள் பலரும் டி20 லீக் தொடர்களில் விளையாடி பணமும் புகழும் ஈட்ட விரும்பி, அனைத்துலகப் போட்டிகளுக்கு விடைகொடுத்து விலகுவதே இதற்குச் சான்று.

இதனால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்குச் செல்வாக்கு மங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்கள் இடம்பெறுவதும் குறைந்துவிட்டது.

இத்தகைய சூழலில், ஒருநாள் போட்டிகள்மீது கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் திசைதிருப்பும் வகையில், மொத்தம் 46 நாள்கள், 48 போட்டிகள் நடக்கவிருக்கிறது உலகக் கிண்ண கிரிக்கெட் திருவிழா.

அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தில் (ஐசிசி) முழு உறுப்பினராக உள்ளவற்றில் ஒன்பது அணிகள், இணை உறுப்பினராக உள்ள ஓர் அணி (நெதர்லாந்து) எனப் பத்து அணிகள் கங்கணம் கட்டிக்கொண்டு களம் காண்கின்றன.

ஐந்து முறை கிண்ணம் வென்ற ஆஸ்திரேலியாவும் தலா ஒருமுறை வென்ற பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளும் களத்திலுள்ளன. இருப்பினும், இருமுறை கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு இம்முறை அதிக வாய்ப்பு இருப்பதாகப் பல முன்னாள் ஆட்டக்காரர்களும் கணித்துள்ளனர்.

சொந்த மண்ணில் போட்டிகள் நடக்கின்றன என்பதே அதற்கு முக்கியக் காரணம்.

கிண்ணம் எந்த அணியின் கைக்குச் சென்றாலும் சரி, உண்மையான வெற்றியாளராகத் திகழப்போவது என்னவோ கிரிக்கெட்தான்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!